விக்சனரி:துப்புரவுக் கையேடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

விக்சனரி மீதான பயனர்களின் பார்வை கூடி வரும் வேளையில் விக்சனரி பக்கங்கள், பொதுவான கட்டமைப்புடன் இருப்பது விரும்பத்தக்கது. இதற்காக விக்சனரி பக்கங்களைத் துப்புரவு செய்து தள நிர்வாகப் பணியில் ஈடுபடும் பயனர்களுக்கு வழிகாட்டியாக இக்கையேடு எழுதப்படுகிறது.

அண்மைய மாற்றங்களைக் கவனித்தோ குறிப்பில்வழி பக்கத்தைப் பயன்படுத்தியோ துப்புரவில் ஈடுபடலாம். எளிய முறையில் பல குறைகளையும் பிழைகளையும் களைய முடியும். கீழே கொடுத்திருப்பவற்றை மனதில் கொண்டு செயல் படலாம்.

  1. பக்கத்தில் உள்ள எழுத்துப் பிழைகளைக் களையுங்கள்.
  2. சொல் அல்லது சொற்றொடரின் முடிவில் முற்றுப் புள்ளிகளை இடுங்கள்.
  3. ஒரே வரிசையில் இடம் பெறும் ஒத்த பொருளையுடைய சொல் விளக்கங்களை ; குறி கொண்டு பிரியுங்கள். ஒத்த பொருளல்லாத சொல் விளக்கங்களை அடுத்தடுத்த வரிகளில் # குறி கொண்டு இடம்பெறச்செய்யுங்கள். ஒத்த பொருளுடைய சொல் விளக்கங்கள், தவறுதலாக அடுத்தடுத்த வரிகளில் இருந்தால், அவற்றை ஒரே வரியில் இடம்பெறச் செய்யுங்கள்.
  4. உள்ளிணைப்புகள் சரியான முறையில் தரப்பட்டுள்ளதா எனப் பாருங்கள். சரியான உள்ளிணைப்பு முறை இங்கு விளக்கப்பட்டுள்ளது. ஒரே பக்கத்தில் அடுத்தடுத்து அமைந்துள்ள மித மிஞ்சிய சிகப்பு இணைப்புகளை நீக்குங்கள்.
  5. பெயரிடல் மரபுக்கு உகாத பக்கங்களை நீக்குங்கள்; அல்லது, தகுந்த பக்கங்களுக்கு வழிமாற்றுங்கள்.
  6. சில பக்கங்களில் சொல்வகைகள் தவறுதலாக இருக்க வாய்ப்புண்டு. அவற்றைத் திருத்துங்கள்.
  7. பொருள் சரியாகவோ துல்லியமாகவோ விளக்கப்படவில்லை என்று கருதினால் {{சரிபார்}} வார்ப்புரு அறிவிப்பை இட்டுப் பேச்சுப் பக்கத்தில் உங்கள் கருத்தைப் பதியுங்கள்.
  8. அழிக்கப்பட வேண்டுமா என்று உறுதி இல்லாத சொற்களின் பேச்சுப் பக்கங்களில் {{speed-delete-on}} வார்ப்புரு அறிவிப்பை இட்டு பேச்சுப் பக்கத்தில் உங்கள் கருத்தைப் பதியுங்கள்.
  9. அவசியமற்ற பிற மொழி, வடமொழிக்கலப்புடைய சொல் விளக்கங்களை நீக்குங்கள். எடுத்துக்காட்டுக்கு, student என்பதற்கு சிஷ்யன் என்று பொருள் சேர்ப்பதும் hospital என்பதற்கு ஆஸ்பத்திரி என்று பொருள் சேர்ப்பதும் அவசியமற்றது. மாற்றாக, சிஷ்யன், ஆஸ்பத்திரி ஆகிய பக்கங்களை உருவாக்கி அங்குத் தமிழ்ச் சொல்லையோ விளக்கத்தையோ தாருங்கள்.
  10. ஆங்கில விக்சனரி, dictionary.com போன்ற தளங்களில் இருந்து எடுத்துக்காட்டு வாசகங்களைச் சேருங்கள். எடுத்துக்காட்டு வாசகங்களைச் சொல் விளக்கத்துக்கு அடுத்து : குறியிட்டுச் சாய்வெழுத்துக்களில் தாருங்கள். எடுத்துக்காட்டுக்கு, grand பக்கத்தைப் பாருங்கள்.
  11. பலுக்கல் கோப்புக்கான இணைப்பு இல்லாத பக்கங்களில் பின்வரும் உரையை இடுங்கள்.
===பலுக்கல்===

* {{audio|en-us-{{PAGENAME}}.ogg|பலுக்கல் (ஐ.அ)}}

12. சொல்வகைக் குறிப்புகள் இல்லாத பக்கங்களில், எடுத்துக்காட்டுக்கு, பின்வருவது போன்ற பொருத்தமான உரையை இடுங்கள்.

===பெயர்ச்சொல்===
'''{{PAGENAME}}'''

13. தமிழ் விக்சனரியில் தாங்கள் பார்க்கும் சொற்பக்கம் அதே தலைப்பில் தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்தால் அதனை தமிழ் விக்சனரியில் அனைவரும் அறியும் வண்ணம் {{விக்கிபீடியா}} என்ற வார்ப்புரு அறிவிப்பை தமிழ் விக்சனரியில் இடுங்கள். எடுத்துக்காட்டுக்கு, சித்திரை பக்கத்தைப் பாருங்கள்.

14. தமிழ்ச் சொல் பக்கங்களை எப்படி துப்புரவாக அமைக்க வேண்டும் என்ற எடுத்துக்காட்டுக்கு, பேரன் பக்கத்தைப் பாருங்கள்.

15. மொழிபெயர்ப்புகள், தமிழ்ச் சொல் பக்கங்களில் மட்டுமே இடம் பெற வேண்டும். பிற மொழிச் சொல் பக்கங்களிலோ, தமிழில் எழுதப்படும் வடமொழிச்சொல் பக்கங்களிலோ (எடுத்துக்காட்டு - ஜலம்) உள்ள மொழிபெயர்ப்புகளை நீக்குங்கள்.

16. தமிழில் விளக்கப்படாத தமிழ்ச் சொல் பக்கங்களில் {{தமிழில் விளக்கவும்}} என்ற வார்ப்புரு அறிவிப்பை இடுங்கள்.

17. பின்னிணைப்பு பக்கங்களில் [[பகுப்பு:விக்சனரி பின்னிணைப்புகள்]] என்ற பகுப்புக் குறியை இடுங்கள்.