அஃதாவது
தமிழ்
[தொகு](கோப்பு) |
- used before words commencing with a vowel, as in அஃதா வது; அது. (தொல்காப்பியம். எழுத். 423, உரை.)
{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
- அதாவது - என்ற பதம் வாக்கியங்களில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்று இங்கு தரப்பட்டுள்ளது.
அகம் என்றால் உள்ளே என்று பொருள். புறம் என்றால் வெளியே என்று பொருள். அதாவது அகம் என்பதை மனதின் உள்ளே என்று எடுத்துக்கொள்ளவேண்டும். ஒளி என்பதை பிரகாசம் என்று சொல்லலாம். அல்லது தெளிவு என்றும் சொல்லலாம். அதே மாதிரி இருள் என்பதை இருட்டு என்று எடுத்துக்கொள்ளலாம். அக ஒளி என்றால் மனதின் தெளிவு அல்லது மனதின் பிரகாசம் என்று கொள்ளலாம். அக இருட்டு என்பது அக ஒளிக்கு முற்றிலும் எதிர்மறையான ஒரு பதம். அதாவது வெளிப்படையாக "முட்டாள்" என்று சொல்லுவதற்கு பதிலாக அக இருள் என்று சொல்லுவார்கள். அத்தகைய மனிதர்கள் - எளிதில் புரிந்து கொள்ள மாட்டார்கள்; நல்ல கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; புதிய தகவல்களை ஏற்றுக்கொள்ள தயங்குவார்கள்; அவர்கள் சொல்வதே சரி என்று வாதிடுவார்கள். இவர்களால் இவர்களை சார்ந்தவர்களுக்கு எந்த பயனும் இருக்காது; மாற்றாக அவர்கள் தொல்லைகள் தான் அதிகம் இருக்கும். மனிதர்களிடையே ஒரு நம்பிக்கை இருக்கிறது - நன்கு கற்று தெளிந்த மனிதர்கள் தெளிவாக இருப்பார்கள். அவர்களை பார்க்கும்போதே அவர்களுடைய முகங்கள் பார்ப்பவர்களுக்கு அவர்களுடைய அக அமைப்பை அறிவித்து விடும். அதாவது "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" - என்று சுருக்கமாக சொல்லுவார்கள்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +