அக்ரோட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)
அக்ரோட்டு மரம்--தூரத்துப் பர்வையில்
அக்ரோட்டு மரம்--கிட்டத்துப் பார்வையில்
அக்ரோட்டு-பச்சைக் கொட்டைகள்
அக்ரோட்டு-உலர்ந்த கொட்டைகள்
ஒரு கொட்டை அக்ரோட்டுப் பருப்பு
அக்ரோட்டுப் பருப்புகள்

பொருள்[தொகு]

அக்ரோட்டு பெயர்ச்சொல்

 1. ஓர் உலர்பழவகை
 2. மரத்தில் காய்க்கும் உண்ணும் கொட்டைவகை


விளக்கம்[தொகு]

 • உலர்பழங்கள் எனப்படும் பாதாம், உலர்ந்த திராட்சை, சாரைப்பருப்பு, உலர்ந்த பேரீச்சம்பழம் முதலிய உண்பொருள்களில் ஒன்று...நல்ல சுவையும், உடற்நலத்திற்கான சத்துக்களும் நிறைந்தது..இந்தியாவில் இனிப்புகள் செய்யவும், மற்ற உலர்பழங்களோடு பரிசுப் பொருளாகவும், பச்சையாக உண்ணவும் பயன்படுகிறது...

மொழிபெயர்ப்பு[தொகு]

 • ஆங்கிலம்
 1. walnuts


குணங்கள்[தொகு]

 • அக்ரோட்டுப் பருப்பினால் உடற்கொழுமை உண்டாகும்...இதன் வேர்ப்பட்டையால் தொண்டைப் புண் ஆறும்...வயிற்றிலுண்டான கிருமிகளையும், பெண்களுக்குண்டாகும் பாற்சுரப்பையும் நீக்கும்...மேலும் அக்ரோட்டினால் தீரும் நோய்கள் மற்றும் கிட்டும் பலன்களுக்குக் கீழே படிக்கவும்...


உபயோகிக்கும் முறை[தொகு]

 1. அக்ரோட்டு மரப்பட்டையை பஞ்சுபோல் நறுக்கி, அதில் ஒரு பலம் அளவிற்கு ஒரு மட்குடுவையிலிட்டு ஒரு படித் தண்ணீர்விட்டு கால் படியாகச் சுண்டக்காய்ச்சி ஆறவிட்டு வடிக்கட்டி வேளைக்கு ஒரு அவுன்சு வீதம் தினம் இரண்டு அல்லது மூன்று வேளை கொடுத்துவர பேதி, சீதபேதி, தட்டைக்கிருமித் தொல்லைகள் போகும்...
 2. மேற்சொன்ன கியாழத்தை வாயிலிட்டுக் கொப்பளித்தால் வாய்விரணம், தொண்டைப்புண் ஆறும்...
 3. பெண்களுக்கு முலைப்பாலை வற்றடிக்கவேண்டிய காலத்தில் இந்தக் கியாழத்தைக் கொடுக்க நன்மை உண்டாகும்...
 4. அக்ரோட்டுப் பருப்பைச் சிறிது கற்கண்டு கூட்டிச் சாப்பிட்டுவந்தால் விந்து தடிப்பேறி போகசக்தியை அதிகப்படுத்தும்...
 5. மேலும் இது இதயத்திற்கும் தீனிப்பைக்கும் வன்மையைத் தரும்...நிறையத் தின்றால் மலம் இளகலாகப் போகும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்ரோட்டு&oldid=1986586" இலிருந்து மீள்விக்கப்பட்டது