அத்திப்பிஞ்சு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
அத்திமரம்--காய்த்துக்குலுங்கும் காய்களும் பிஞ்சுகளும்
அத்திப்பிஞ்சு

பொருள்[தொகு]

'அத்திப்பிஞ்சு பெயர்ச்சொல்

  1. அத்திக் காய்க்கு முன் பருவம்--பிஞ்சு
  2. அத்திக்காயின் பிஞ்சு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. fig-tender fruit

குணங்கள்[தொகு]

  • அத்தி + பிஞ்சு = அத்திப்பிஞ்சு...அத்திப்பிஞ்சுகள் துவர்ப்புச் சுவையுடையவை...இவை மூலவாயு,கிரகணி, இரத்தமூலம், வயிற்றுக்கடுப்பு இவைகளைப் போக்கும் தன்மையுடையவை...

உபயோகிக்கும் முறை[தொகு]

  • அத்திப்பிஞ்சுகளை நறுக்கி துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்போடுக் கூட்டி கூட்டமுது செய்து உண்ணலாம்...இது உடம்புக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும்...இந்தப் பிஞ்சுகளை வேறு சரக்குகளோடு சேர்த்து அத்திப்பிஞ்சு கலவைக் கற்கம்என்னும் மருந்து தயாரித்து சில நோய்களைக் குணப்படுத்த உபயோகிப்பர்...

அத்திப்பிஞ்சு கலவைக் கற்கம்[தொகு]

  • அத்திப்பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை ஆகிய சரக்குகளைச் சமனெடையாகத் தட்டையான அம்மிக்கல்லில் வாழைப்பூச் சாறுவிட்டு நெகிழ அரைத்து வைத்துக்கொண்டு இதில் வேளைக்கு நெல்லிக்காய் அளவு தினம் மூன்று வேளை கொடுத்தால் சீதபேதி, இரத்தபேதி, வயிற்றுக்கடுப்பு முதலியவைகள் நீங்கும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=அத்திப்பிஞ்சு&oldid=1898412" இருந்து மீள்விக்கப்பட்டது