அந்திசந்தி கூடும் வேளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
அந்திசந்தி கூடும் வேளை
அந்திசந்தி கூடும் வேளை


பொருள்[தொகு]

அந்திசந்தி கூடும் வேளை, பெயர்ச்சொல்.

  1. மாலையும் இரவும் இணையும் தருணம்.

விளக்கம்[தொகு]

  • வடமொழியும் தமிழும் கலந்த சொல். இந்த சொற்றொடர் ஒரே சொல்லாகப் பயன்படுத்தப்படும்: மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும் சந்திக்கும் நேரத்தை இப்பெயரில் அழைப்பார்கள்... இந்த நேரத்தில் யாராவது படுத்திருந்தால் அவர்களை நோய் தாக்கும் என்பது சாத்திரம்... எனவே இந்த நேரத்தில் வீட்டிலிருக்கும் நோயுற்றோரும் சற்று எழுந்து உட்கார முயற்சிப்பார்கள் !!! காலையும் மாலையும் என்றும் பொதுவாகப் பொருட்படும்...ஆனால் மேற்கண்ட சொற்பிரயோகத்தின் நோக்கத்தின்படி மாலையின் இறுதிப்பகுதியும் இரவின் முற்பகுதியுமேயாகும்...அந்தி என்றால் இரவு என்றே அர்த்தம்...ஆகவேதான் சந்திரன் அந்திகாவலன் எனப்படுகிறான்...சந்தி என்றால் சாயங்காலம் அதாவது மாலை என்று பொருள்...

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. meeting point of the end of evening and the beginning of early night..

பயன்பாடு[தொகு]

  • பாபு, அந்திசந்தி கூடும் வேளை. படுத்தது போதும் கொஞ்சம் எழுந்து உட்கார். வியாதி பிடுங்கப் போகிறது.