அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல், உரிச்சொல்.
  1. மாறாமல்
  2. மாறுபாடு அடையாமல்
  3. முன்பிருந்தபடியே

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. being unchanged
  2. without any change
  3. remaining unchanged

விளக்கம்[தொகு]

  • இது உரையாடல்களில் தாராளமாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர்...சொல்லுக்குச் சொல் 'முன்பு பார்த்த உடலிற்கு அழிவு இல்லாமல்' என்று பொருட்பட்டாலும், வழக்கில் ஒரு நபரை நீண்ட காலத்திற்குப் பிறகு, பார்க்கும்போது அவர், நடை, உடை, பாவனை, பழகும் முறை, உடற்தோற்றம் மற்றும் பொருளாதார நிலை போன்றக் கூறுகளில் குறிப்பிட்டுப் பேசுமளவு மாறாமல்/மாற்றமடையாமலிருந்தால் அந்த நிலையை இச்சொற்றடர்களால் வருணிப்பர்...
  • எந்த விடயமானாலும் வெகு காலமாக ஒரே விதமாக, ஒரே பத்ததியில் தொடர்ந்து இருக்குமானால், அவ்விடயங்களைக் குறிப்பிட்டுப் பேசும்போதும் இந்த சொற்றொடரைப் பயன்படுத்துவர்...