அரிவாள்மூக்குப் பச்சிலை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- அரிவாள் + மூக்கு + பச்சை + இலை + அரிவாள்மூக்குப் பச்சிலை.
sida rhomboidea..(தாவரவியல் பெயர்)
பொருள்
[தொகு]- அரிவாள்மூக்குப் பச்சிலை, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]குணம்
[தொகு]- இஃதொரு அற்புதமான மூலிகை...இது ஆயுதங்களினால் உண்டாகும் காயத்தை விரைவில் ஆற்றவல்லது...மேலும் மகா விஷத்தையும், இரத்தக்கெடுதியால் பிறந்த சிரஸ்தாபரோகம் என்னும் பிணியையும் போக்கும்...
உபயோகிக்கும் முறை
[தொகு]- இந்த மூலிகையை, ஒரு சுத்தமாகக் கழுவிய, தட்டை அம்மிக்கல்லில் வைத்து வெண்ணெய்ப்பதத்தில் அரைத்து, வெட்டுப்பட்ட காயங்களுக்குத்தடவி, ஒரு சுத்தமானத் துணியால் அழுத்திக்கட்டவேண்டும்...இதனால் இரத்தச் சொறிவு நீங்கி காயங்கள் சீக்கிரமாக ஆறிவிடும்...இந்த மூலிகையுடன் சிறிது பூண்டு, மிளகு சேர்த்து அரைத்து வேளைக்கு சிறு சுண்டைக்காய் அளவு அந்திசந்தியும் மூன்று நாட்கள் சாப்பிடக்கொடுத்து , பாற்பத்தியம் கடைப்பிடித்தால் கடுமையான விஷங்கள் இறங்குவதுடன், தலைவலியும் போய்விடும்..