உள்ளடக்கத்துக்குச் செல்

அருவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

(பெ)

ஒக்கேனக்கல் அருவி
ஒக்கேனக்கல் அருவி

அருவி

  1. செங்குத்து அல்லது அதை அண்மித்த சாய்வைக்கொண்ட சரிவின் வழியே நீர் பாய்தல்
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
  • மலையினின்று விழும் அருவியைக் காண்பது கண்ணுக்கு இன்பம்; அருவியில் நீராடுவது உடலுக்கு இன்பம். திருநெல்வேலியில் உள்ள திருக்குற்றலாத்திலே பல அருமையான அருவிகள் உள்ளன. தேனருவி என்பது ஓர் அருவியின் பெயர். வட அருவி என்பது மற்றோர் அருவி; ஐந்தலை அருவி என்பது இன்னோர் அருவி. அருவியை நினைக்கும்பொழுதே கவிகள் உள்ளத்தில் ஆனந்தம் பிறக்கும்; கவிதை பொங்கும். "வீங்குநீர் அருவி வேங்கடம்" என்று திருப்பதியைச் சிறப்பித்துப் பாடியுள்ளார் சிலப்பதிகார ஆசிரியர். "பொங்கருவி தூங்கும் மலை பொதிய மலை என் மலையே" என்று செம்மாந்து பாடினாள் பொதியமலைக் குறத்தி. "தேனருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்" என்று பாடினாள் திருக்குற்றாலக் குறவஞ்சி. இத்தகைய பழமையான சொல் இன்றும் திருநெல்வேலியில் வழங்குகின்றது. ஆனால், சென்னை முதலிய இடங்களில் அருவி என்றால் தெரியாது; நீர்வீழ்ச்சி என்றால்தான் தெரியும். நீர்வீழ்ச்சி என்பது waterfall என்ற ஆங்கிலப் பதத்தின் நேரான மொழிபெயர்ப்பு போல் காணப்படுகின்றது. (பழகு தமிழ்: வேருக்கு நீர் வார்த்தவர்கள் -1, இடைமருதூர் கி.மஞ்சுளா, தமிழ்மணி, 14 ஆக 2011)

படிமங்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=அருவி&oldid=1986577" இலிருந்து மீள்விக்கப்பட்டது