உள்ளடக்கத்துக்குச் செல்

ஆடாதோடை வேர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆடாதோடைச் செடி--இச்செடியின் வேர்
ஆடாதோடைச் செடி--இச்செடியின் வேர்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

*Adhatoda Vasica--Root--(தாவரவியல் பெயர்)

ஆடாதோடை வேர், பெயர்ச்சொல்.

பொருள்

[தொகு]
  1. ஆடாதோடை மூலிகைச் செடியின் வேர்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. root of malabar nut herbal plant

விளக்கம்

[தொகு]

இது ஒரு மருத்துவ குணமுள்ள ஆடாதோடை என்னும் மூலிகைச்செடியின் வேராகும்...இந்த வேரினால் இருமல், அக்கினி மந்தம்,சுவேத பித்தம், கஷ்ட சுவாசம், களரோகம் முதலிய நோய்கள் தீரும்...

உபயோகிக்கும் முறை

[தொகு]

ஆடாதோடையின் வேர்ப்பட்டை கபரோகங்களைப் போக்குவதில் சிறந்தது...இதனை நிழலில் உலர்த்திச் சூரணங்களில் கூட்டி உபயோகித்தல் வேண்டும்..இந்த வகையில் ஆடாதோடைச் சூரணம் மிகுந்த பயனளிக்கும்...

ஆடாதோடைச் சூரணம் செய்யும் முறை

[தொகு]

ஆடாதோடை வேர்ப்பட்டை 2 பலம், ஆடாதோடைப்பூவின் கதிர் 4 பலம், பேரரத்தை, சிற்றரத்தை, வாய்விளங்கம், சிறு தேக்கு, கோரைக்கிழங்கு, இச்சிப்பட்டை, கரிமஞ்சள், மிளகு, கண்டங்கத்திரி உலர்ந்த இலை ஆகியவைகளில் ஒவ்வொன்றிலும் 1 பலம்., காஞ்சொறிவேர், தூதுவளை உலர்ந்த இலை வகைக்கு 2 பலம்., அரிசித்திப்பிலி 3 பலம், கோஷ்டம், காட்டாத்திப்பூ வகைக்கு அரை பலம் இவைகளை நன்றாக இடித்துச் சூரணம் செய்து அத்துடன் அரை பலம் சாம்பிராணிப் பதங்கம் கூட்டிக்கலந்து புட்டியில் வைத்துக்கொள்ளவேண்டும்...இந்தச் சூரணத்தில் வேளைக்கு 1/8 ரூபாய் எடை பாலில் கலக்கித் தினமும் இரண்டு வேளை பத்து முதல் இருபது நாட்கள்வரை கொடுத்துவர சீதளசம்பந்தத்தினால் உண்டான சுவாசகாசம், இரைப்பிருமல் போகும்.

  • ஆடாதோடை இலைகளைப்பற்றிய விளக்கங்களுக்கு இங்கு சொடுக்கவும்..[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆடாதோடை_வேர்&oldid=1232356" இலிருந்து மீள்விக்கப்பட்டது