ஆடாதோடை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
*Adhatoda Vasica...(தாவரவியல் பெயர்)
ஆடாதோடை(பெ)
- ஒரு மருந்துச்செடி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- malabar nut; justicia adhatoda, as eaten only by goats
மருத்துவ குணங்கள்
[தொகு]ஆடாதோடை ஓர் அற்புதமான மூலிகைச்செடி..இதன் இலைகளுக்கு கபாதிக்கம், வாத தோஷம், அநேக விதமான சுரங்கள், சந்நிபாதம், வயிற்று நோய் ஆகியப் பிணிகளைப் போக்கும் வல்லமை உள்ளது...
பயன்படுத்தும் முறை
[தொகு]- ஆடாதோடை இலைகளைச் சுரசம் செய்து (அதாவது அரைத்துப் பிழிந்து வடிகட்டிய சாற்றை, இரும்புக் கரண்டியைச் சூடாக்கி அதில் தோய்த்து, தோய்த்து சூடாக்குவது) கால் முதல் அரை தேக்கரண்டி தேன் கூட்டி தினமும் இரண்டு மூன்று வேளை கொடுக்க கப சம்பந்தமான நோயைக் குணப்படுத்தும்...இந்த சுரசத்தையே அதிகவளவில் கொடுத்தால் வாய் குமட்டி வாந்தியாகி கபம் முழுதும் வெளிப்படும்...
- மற்றொரு முறையாக, ஒன்று இரண்டு தோலா எடையுள்ள ஆடாதோடை இலைகளை குறுக்க நறுக்கி ஒரு பழகிய மட்பாண்டத்தில் போட்டு கால் படி நீர் விட்டு வீசம் படியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி வேளைக்கு ஓர் அவுன்சு வீதம் தினமும் இரண்டு வேளை சிறிது திப்பிலிச் சூரணமும்,தேனும் கூட்டிக் கொடுத்து வர இரத்தம் தூய்மையாகும், கபம் கரையும், கஷ்ட சுவாசம் நிவர்த்தியாகும்...
- குழந்தைகட்கு வயதுக்குத் தக்கவாறு ஆடாதோடை சுரசத்தை பத்து முதல் இருபது துளிகள் தேனுடன் கலந்து கொடுக்கலாம்...இந்த மூலிகை பித்த சீதளத்தை மிக விரைவில் குணப்படுத்தும் தன்மையுள்ளதாகையால் சுரநோய்கட்கும் சிறப்பாக ஆடாதோடை கியாழம் செய்து பயன்படுத்துவர்..இந்தச் செடியின் வேர்களிலிருந்து ஆடாதோடைச் சூரணம் செய்தும் வேறு சில நோய்களைக் குணப்படுத்துவர்...
- ஆடாதோடை வேரைப்பற்றிய விளக்கங்களுக்கு இங்கு சொடுக்கவும்...[1]
பயன்பாடு
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---ஆடாதோடை--- DDSA பதிப்பு + வின்சுலோ +