உள்ளடக்கத்துக்குச் செல்

இராமவாசகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
இராமவாசகம்:
இராமன் தன் பத்தினி சீதையுடன்..இவர் ஒரு வாக்குகொடுத்துவிட்டால் அது நிலையானது..அதுவே இராமவாசகம்.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • இராம + வாசகம் = இராமவாசகம்

பொருள்

[தொகு]
  • இராமவாசகம், பெயர்ச்சொல்.
  1. தவறாத வாக்கு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. sacred promise, plighted word, as irrevocable as the word of Rama.

விளக்கம்

[தொகு]
  • இராமாயணக் காப்பியத் தலைவன் இராமனுக்கு மூன்று சிறப்புகளென்பர்...அவை ஒரே பேச்சு (வாக்கு), ஒரே பாணம்,(அம்பு வீச்சு), ஒரே பத்தினி என்பதாம்..இராமன் ஒரு வாக்குக் கொடுத்துவிட்டானென்றால் எந்த நிலையிலும் மீறாது செயல்படுத்தியே தீருவான் எனக் குறிப்பிட பல நிதரிசனங்கள் இராமகாதையில் உண்டு...அதுபோலவே தற்போதைய சமூகத்திலும், நடைமுறையில் உறுதியாக, எந்த நிலையிலும் மாறாதவாறு கொடுக்கப்பட்ட வாக்கை அதாவது பேச்சு/உறுதிமொழியை இராமவாசகம் என்பர்.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இராமவாசகம்&oldid=1400030" இலிருந்து மீள்விக்கப்பட்டது