இறைவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

இறைவன்

  1. கடவுள்
  2. தெய்வம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - god

இலக்கியப் பயன்பாடு[தொகு]

திருக்குறள்[தொகு]

  • இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.5

  • பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார். 10

  • உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்

செறினும் சீர்குன்றல் இலர். 778

திருவாசகம்[தொகு]

  • ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

  • அருளிய திருமுகத்து அழகு உறு சிறுநகை

இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்

பொலிதரு புலியூர் புக்கு இனிது அருளினன் 145

  • பேர்அமைத் தோளி காதலன் வாழ்க

ஏதிலார்ககு ஏதில்எம் இறைவன் வாழ்க

காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க 105

"https://ta.wiktionary.org/w/index.php?title=இறைவன்&oldid=1988263" இலிருந்து மீள்விக்கப்பட்டது