உளறுதல் குழறுதல்
Appearance
சொல் பொருள்
உளறுதல் – பொருளறிவுரா முதியர் பேச்சு குழறுதல் – பொருளறிவுராக் குழவியர் பேச்சு
விளக்கம்
வாய்த்தடுமாறுதல் உளறுதல் ஆகும். நாவளைவு நெளிவுப் பயிற்சி வாராமையால் குழறுதல் நிகழும். உளறுதல் பழிப்புக்கு இடமாகும். குழறுதல் இளையரிடத்திருந்து வருங்கால் ‘குழலினும் யாழினும் இனி’தெனத் துறவோராலும் கொள்ளப்படும்.