எருக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

எருக்கு
எருக்கு
எருக்கு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • எருக்கு, பெயர்ச்சொல்.
 1. செடி வகை
  (எ. கா.) எருக்கின் முகிழ்நோக்கும் (தணிகைப்பு. களவு. 274)
 • எருக்கு, வினைச்சொல்.
 1. முழக்கு, ஒலிக்கச் செய்
  எங்களுக் கிறைவன் என்றாங்கு இடிமுரசு எருக்கினானே (சீவக.சீவாசிந்தாமணி)
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்:
 1. A coarse, milky shrub, the charcoal of which is used in making gunpowder; yarcum, madar.
 2. to trumpet
விளக்கம்
 • அநேக மருத்துவப் பயன்கள் கொண்ட ஒரு செடி...எல்லா இடங்களிலும் தானாகவே முளைக்கும்...இதன் ஒவ்வொரு பாகமும் பட்டை, பால், பூ, இலை என தனிப்பட்ட மருத்துவக் குணங்கள் கொண்டவை...பிள்ளையார் சதுர்த்தியன்று வினாயகனைப் பூசிக்கப் பயன்படும் அநேக மலர்களில் எருக்கம்பூவும் ஒன்று...எருக்கில் வெள்ளை எருக்கு என்ற வகை பிள்ளையாருக்கு மிக விசேடமான ஒரு மூலிகைச் செடி...இந்த வெள்ளை எருக்கில் விநாயகரின் உருவத்தைச் செதுக்கி விக்கிரகம் செய்து வழிபடுவது மரபு,மேலும் கோழி வளர்க்கும் வீடுகளில் செல் பிடித்துக் கொண்டால் எருக்கம் செடியினை எடுத்து வந்து வைப்பர்...ரதசப்தமி என்னும் இந்துக்களின் புனித நாளில் எருக்கன் இலைகளைத் தலையில்வைத்து அவற்றின்மீது தண்ணீர்விட்டுக் குளித்தல் சிறப்பு என்பர்...

{ஆதாரங்கள்} --->

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=எருக்கு&oldid=1683861" இருந்து மீள்விக்கப்பட்டது