எள்ளுந்தண்ணீருமிறைத்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- எள்ளு + தண்ணீர் + இறை-த்தல்
பொருள்
[தொகு]- எள்ளுந்தண்ணீருமிறைத்தல், வினைச்சொல்.
- (செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Intransitive verb
விளக்கம்
[தொகு]- இந்துச் சமயத்தவர் இறந்த தம் தாய்/தந்தையருக்கு மாதாமாதம் அமாவாசை திதி வரும் நாட்களிலும், ஏனைய சில விசேடமான நாட்களிலும், மற்றும் வருடாவருடம் அவர்கள் இறந்த மாதம் மற்றும் திதி வரும் நாட்களிலும் செய்யும் சடங்குகளிலும் தருப்பைப் புல்லின்மீது எள்ளைத் தண்ணீருடன் சேர்த்து இறைத்து(விட்டு), அவர்களின் பெயர், கோத்திரங்களைச் சொல்லி உரிய மந்திரங்களை உச்சரிப்பர்..இதனால் அவர்களுடைய ஆன்மா சாந்தியடைவதோடு, ஆண்டுக்கொரு முறைச் செய்யும் திவசம்/கருமம் என்னும் செயலின்மூலம் அவர்களுக்கு உணவும் கிடைக்கின்றன என்பது இந்துக்களின் நம்பிக்கை...மண்ணுலகத்தாரின் ஓர் ஆண்டு என்பது, விண்ணுலகம் சென்றோருக்கு ஒரு நாள் என்பதால், இங்கு ஆண்டுதோறும் செய்யும் சடங்கு, அவர்களுக்கு நாள்தோறும் செய்யும் உணவளித்தலாகும்...