கட்டுக்கடங்காத
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கட்டுக்கடங்காத, (உரிச்சொல்).
பொருள்
[தொகு]- ஒரு வரைக்குள் அடங்காத
- எல்லை மீறிப் போன
- ஒரு வரம்பிற்குள் அடங்காத
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- uncontrollable
- intractable
- unmanageable
- unruly
விளக்கம்
[தொகு]- எல்லா விடயங்களும் இம்மட்டும்தான் நடக்கவேண்டும்/இருக்கவேண்டும் என வரைமுறைப்படுத்துவது/நினைப்பது கட்டு போடுவது ஆகும்...அதே விடயங்கள் அந்தக் கட்டுக்குள் அடங்காமல் மீறி நடந்துவிடும் தன்மையைச் சொல்லும்போது கட்டுக்கடங்காத என்று விவரிப்பர்.
பயன்பாடு
[தொகு]- இராமுவுக்குப் பொய் சொல்லுபவர்களைக் கண்டால் அவர்கள் எவ்வளவுப் பெரியவர்களாக இருந்தாலும் கட்டுக்கடங்காமல் கோபம் வந்துவிடும்...
- நேற்றுப் பெய்த மழையில் ஏரிக்கரை உடைந்து, மணல் மூட்டைகளால் தடுத்தபோதிலும், வெள்ளம் கட்டுக்கடங்காமல் ஊருக்குள் புகுந்துவிட்டது...
- அந்த கோவிந்து கட்டுக்கடங்காதவன்....அவனிடம் சற்று எச்சரிக்கையாகத்தான் இருக்கவேண்டும்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கட்டுக்கடங்காத--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி