கிண்டி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கிண்டி, .
பொருள்
[தொகு]- குழந்தைகளுக்குத் பால்/தண்ணீர் புகட்டும் சிறு பாத்திரம்
- சமைக்கும் உணவு கருகிப் போகமால், தீய்ந்து போகாமல் கிளறி விட, கிண்டி விட உதவும் கோல் அல்லது கரண்டி
- சென்னை மாநகரின் ஒரு பகுதி.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a small vessel to feed water to infants/babies
- a stirrer, mixer, blender, beater, churner, muddler, puddler
- a part of madras metro city
விளக்கம்
[தொகு]- சிறு குழந்தைகளுக்குத் தண்ணீர் புகட்ட கிண்டி என்னும் சிறு பாத்திரம் முன்பெல்லாம் பயன்படுத்தப்பட்டது... கைப்பிடிக்குள் அடங்கக்கூடிய சிறு கோப்பையளவு உள்ள ஒரு பாத்திரம்...மூடியும் கைப்பிடியுமுள்ளது...இந்தப் பாத்திரத்தின் கைப்பிடியுள்ள பக்கத்திற்கு நேர்எதிர்ப்பக்கத்தின் அடியிலிருந்து குழந்தையின் வாயில் போகும்படியாக இலாவகமாக வளைத்துப் பொருத்தப்பட்ட ஒரு குழல்...இதுதான் கிண்டி...தண்ணீர் அல்லது பால் நிரப்பி குழந்தைகளுக்குத்தர மிகவும் வசதியான ஒரு சாதனம்...
- சென்னைப் பெருநகரின் தெற்கில் ஒரு பகுதிக்கு கிண்டி எனப்பெயர்...இங்குதான் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி தேசீயப்பூங்கா, ஆளுனர் இருப்பிடமான ராஜ்பவன், பாம்பு/முதலைப் பண்ணை,சிறுவர்களுக்கான பூங்கா ஆகியவைகளோடு தேசியத் தலைவர்களான மகாத்மா காந்தி, காமராஜர், ராஜாஜி ஆகியோருக்கு நினைவு மண்டபங்களும் உள்ளன.இதைத் தவிர தமிழ் மொழிக்காகப் போராடிய மொழிப்போர் தியாகிகள் மண்டபமும், தியாகிகள் மணி மண்டபமும், கிண்டியில் அமைந்துள்ளன. அண்ணா பல்கலைக்கழத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி இந்தியாவிலேயே பழமை வாய்ந்ததும் உலகிலேயே மிகப்பழமை வாய்ந்த இத்தகைய அமைப்புகளில் ஒன்றுமாகும்...இந்தியப் புகழ் மிக்க குதிரைப் பந்தயங்களும் இங்கு நடைபெறுகின்றன...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கிண்டி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி