கிண்டு
Appearance
தமிழ்
[தொகு]கிண்டு வினைச்சொல் .
பொருள்
[தொகு]- கிளறு
- கிளறியெடு
- தூண்டு
- கெட்டிக்காரன்....(கொச்சை மொழி)
- பரிகாசம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- stir up cooking food with a ladle to avoid being burnt; mix, blend, whip, beat, churn, puddle, muddle
- kindle
- smart man.....(slang)
- Ridicule
விளக்கம்
[தொகு]- 1) சில உணவுப்பண்டங்களை (உப்புமா, கிச்சடி போன்றவை) சமைக்கும்போது உணவு அடிப்பிடித்துக் காய்ந்து, தீய்ந்து விடாமல் அவைகளை செய்து முடிக்கும்வரை கிளறிக்கொண்டும், கெல்லிக்கொண்டும் இருப்பார்கள்...இந்த செய்கையை கிண்டு என்பர்.
- 2) ஒருவருக்கு ஒரு விடயத்திலுள்ள ஆர்வத்தை, அந்த விடயத்தைப்பற்றி அடிக்கடி பேசியோ அல்லது அது சம்பந்தமான காட்சிகளைக் காட்டியோ அந்த ஆர்வத்திற்கு மேலும் மெருகேற்றி அதிகப்படுத்தித் தூண்டும் செயலையும் கிண்டுதல் என்பர்.
- 3) ஒருவரை கெட்டிக்காரர் என்று குறிப்பிடுவதற்குக் கொச்சைமொழியில் 'அவன் நிரம்ப கிண்டு' என்பர்..
- 4) பரிகாசம் செய்தலையும் கிண்டு என்பர்.
பயன்பாடு
[தொகு]- 1) நாளைக் காலை சிற்றுண்டிக்கு கீதாவை உப்புமா கிண்டச் சொல்லு...
- 2) முகுந்தன் பெருமாள் கோவிலுக்கு அழைத்துச்சென்று அங்கிருந்த சிற்பங்களைக்காட்டி என் சிற்பக்கலை ஆர்வத்தைக் கிண்டிவிட்டான்.
- 3) நாராயணனை நிரம்ப கிண்டு என்றனர், இல்லை அவனொரு மண்டு என்றேன் நான்...
- 4) ஏன் அவனை இப்படிக் கிண்டுகிறாய்? கேட்க யாருமில்லை என்று நினைத்தாயா?
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---கிண்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி