கீரைமசித்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கீரைமசித்தல், வினைச்சொல்.
- (கீரை+மசி+த்தல்)
(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- கீரைகடைதல்
- சமைக்கும்போது கீரைக்கறியை மத்தாற் பதப்படுத்துதல்.
விளக்கம்
[தொகு]- தமிழக உணவுத் தயாரிப்புகளில் மசியல் என்பது ஒரு பக்குவம்..கீரையை துவரம்பருப்போடுச் சேர்த்து, நீர் விட்டு, நன்றாக் குழையும்வரை வேகவைத்து, மத்தினால் கீரையும், பருப்பும் ஒன்றுக்கொன்று முழுவதும் சேரும்படி கூழாக மசித்துவிடுவர்...இந்தச் செய்கையே கீரைமசித்தல் ஆகும்...பின்னர் தேவைப்பட்ட அளவு உப்புப்போட்டுக் கொதிக்கவைத்து,வத்தல் மிளகாய்த் துண்டுகள், கடுகு, ஊளுத்தம் பருப்பு , சீரகம், பெருங்காயம் ஆகியவைகளை அதில் தாளித்துக்கொட்டுவர்....இந்த உணவுத் தயாரிப்புக்கு கீரை மசியல் என்பர்...சாதத்தோடு பிசைந்து சாப்பிடுவர்கள்...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To mash pot-herbs to pulp
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +