குலவுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • குலவுதல், பெயர்ச்சொல்.
  1. விளங்குதல்
    குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள் (தேவாரம்)
  2. மகிழ்ச்சிகொள்ளுதல்
    ரிடங் குலசிவ்செல்ல (கந்தபுராணம்)
  3. உலவு
    உலாவுதல்
    எமதன்னையை நினைத்தே குலவினனோ வரக
  4. நெருங்கியுறவாடுதல்
    அவனோடு குலவுகிறான்
  5. தங்குதல்
    கடலிற் குலவுகின்றதோர் பொருளெலாம் (கந்தபுராணம்)
  6. வளைதல்
    குலவுச்சினைப் பூக்கொய்து (புறநானூறு)
  7. குவிதல்
    குலவுமணல் (ஐங்குறுநூறு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to shine, gleam, be conspicuous
  2. to rejoice
  3. to walk, move about
  4. to be on very intimate terms
  5. to lie, remain
  6. to bend, curve
  7. to lie heaped, as sand


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குலவுதல்&oldid=1179132" இலிருந்து மீள்விக்கப்பட்டது