குளிப்பாட்டுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- குளிப்பு + ஆட்டு--தல்
பொருள்
[தொகு]- குளிப்பாட்டுதல், வினைச்சொல்.
- (செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
- குளிப்பித்தல்
- நீராட்டுதல்
- (எ. கா.) பொருநைநீர் குளிப்பாட்டி (காஞ்சிப்பு. தழுவ. 288).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- transitive verb
விளக்கம்
[தொகு]- வீடுகளில் கைக்குழந்தைகளைக் குளிப்பித்தலை குளிப்பாட்டுதல் என்பர்...கால்களை சற்று உயரமாக ஒரு மணையில் நீட்டி வைத்துக்கொண்டு, குழந்தையை தலைக்குப்புற கால்களில் படுக்கவைத்து, மிதமான சூடுள்ள நீரால் குளிப்பாட்டுவர்...குழந்தையின் கண்கள், மூக்கு, வாயில் நீர் செல்லாமல் இருக்க இந்த முறை பயன்படும்...மீண்டும் குழந்தையைத் தூக்கி மடியில் இருத்திக்கொண்டு, அதன் புருவங்களின் மேலே உள்ளங் கைகளைப் பரப்பி, குடைபோல் வைத்துக்கொண்டு, தலையில் நீர்விட்டு அலசுவர்...கைக்குழந்தைகளை அவற்றிற்கு எவ்வித பாதிப்புமில்லாமல் குளிப்பாட்டுவது ஒரு கலை...வீட்டிலுள்ளப் பெரியவர்கள் அல்லது போதிய அனுபவம் கிட்டும்வரை புதுத் தாய்மார்கள் பெரியவர்களின் மேற்பார்வையில் இந்தச் செயலைச் செய்வர்...குழந்தைகளைக் குளிப்பாட்ட இருவரின் சேவைகள் தேவைப்படும்...
- இதுவமன்றி மாடு, குதிரை, யானை, நாய் போன்ற விலங்குகளை தண்ணீர்விட்டுச் சுத்தம் செய்தலையும் குளிப்பாட்டுதல் என்பர்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +