உள்ளடக்கத்துக்குச் செல்

கொத்தவரங்காய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • Cyamopsis Tetragonoloba (தாவரவியல் பெயர்)
  • இதில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது... நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்... இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்...மற்றக் காய்கறிகளைவிட விலை குறைவாகவும் இருக்கும்... கிராமங்களில் இன்றும் கொத்தவரை வத்தல் செய்வதுண்டு... கொத்தவரங்காயை உப்பிட்டு அவித்து வெயிலில் காயவைத்து வற்றலாக்கி வைத்திருப்பார்கள்... இதனை குழம்பில் போடலாம்... எண்ணெயில் வறுத்தும் சாப்பிடலாம்...வத்தக்குழம்புவைக்க மிகச்சுவையாக இருக்கும்...மேலும் பாகப்படி கறியாகவோ, கூட்டமுதாகவோ செய்தும் உண்பர்...
  • சித்த மருத்துவத்தில் இது உணவுப்பத்தியம் இருப்போருக்கு ஆகாது...சாப்பிட்ட மருந்தை முறிக்கும்...வயிற்றில் வாயுவை உபரிசெய்து பித்தவாயு,மார்புவலி,கபம்,வாதக்கடுப்பு இவையை உண்டாக்கும்...பித்தத்தால் நளிரையும் முறிக்கும்...நாட்டு மருந்து சாப்பிடுகிறவர்கள் இந்தக்காயை உண்ணவேக் கூடாது...
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கொத்தவரங்காய்(பெ)

  1. கொத்தவரை
  2. ஒரு வகை காய்கறி ஆகும்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=கொத்தவரங்காய்&oldid=1162590" இலிருந்து மீள்விக்கப்பட்டது