உள்ளடக்கத்துக்குச் செல்

கொன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கொன் (இ)

கொன் என்னும் இடைச்சொல் 4 பொருளில் வரும்
அச்சம் பயமிலி காலம் பெருமை என்று அப்பால் சான்கே கொன்னைச் சொல்லே (தொல்காப்பியம் இடையியல் 6)
  1. அச்சம்
  2. பயமிலி = பயனின்றி
  3. காலம்
  4. பெருமை
விளக்கம்
  1. கொன்முனை இரவூர் போலச் சில ஆகுக நீ துஞ்சு நாளே (குறுந்தொகை 91)
  2. கொன்னே வந்து கொன்னே போயினர்.
  3. கொன்வரல் வாடை நினது எனக் கொண்டேனோ (மேல் நூற்பாவுக்கு இறம்பூரணர் உரை மேற்கோள்)
  4. கொன்னூர் துஞ்சினும் யாம் துஞ்சலமே (குறுந்தொகை 138)
பயன்பாடு
  • ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கொன்&oldid=994527" இலிருந்து மீள்விக்கப்பட்டது