தமிழ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

Nohat-logo-X-ta new.png
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

தமிழ்:
-
தமிழ்:
-
(கோப்பு)

பொருள்[தொகு]

 • தமிழ், பெயர்ச்சொல்.
 1. இனிமை (பிங்.)
 2. நீர்மை (பிங்.)
 3. இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என மூவகையாக வழங்கும் மொழி
 4. தமிழ் இலக்கியம், தமிழ் நூல்
 5. தமிழர்
  (எ. கா.) அருந் தமிழாற்ற லறிந்திலர் (சிலப். 26, 161).
 6. தமிழ்நாடு
  (எ. கா.) தண் டமிழ் வினைஞர் (மணி. 19, 109).
 7. தமிழர்களால் பேசப்படும் மொழி.
 8. கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட மொழியாகக் கருதப்படுகிறது.
 9. சிந்து சமவெளி (Indic) சமவெளி நாகரிகத்தில் இம்மொழி இருந்திருக்கிறது என்று அகழ்வாராய்ச்சிகள் உறுதிசெய்துள்ளன.
 10. க ச ட ப ற - வல்லினம், ங ஞ ந ன ண - மெல்லினம், ய ர ல வ ள - இடையினம் என அழகு பெறுவதும் குறிப்பிடத்தக்கது

சிறப்புப் பெயர்கள்[தொகு]

 • தமிழ் என்ற பொதுவான பெயர் இருந்தாலும் பல காரணங்களுக்காக ஏற்பட்ட பிற பெயர்கள்.
 • அகத்தியம்: ஆதி சிவன் பெற்றெடுத்து அகத்திய முனிவரால் வளர்க்கப்பட்டு,பரப்பப்பட்டதால் அகத்தியம் என்று பெயர்.
 • பொதிகை மொழி: பொதிகை மலையில் தோன்றியதாகக் கருதப்பட்டதால் பொதிகை மொழி என்று பெயர்.
 • தென் மொழி: மிகப் பண்டையக்காலத்தில் பாரதத்தின் வடக்கில் வழக்கிலிருந்த மொழி வடமொழி (சமசுகிருதம்) எனப்பட்டபோது, தெற்கில் வழக்கிலிருந்த தமிழ், தென் மொழி எனப்பட்டது.
 • திராவிடம்: வடமொழியில் தமிழ் மொழியை திராவிட பாஷா என்றே அழைத்தனர்.

தமிழின் மற்ற சிறப்புகள்[தொகு]

 1. உலகிலேயே மிகவும் பழமையான, வளமிக்க உயர்தனிச் செம்மொழிகள் என்று போற்றப்படும் ஐந்து மொழிகளுள் ஒன்று தமிழ்...மற்ற மொழிகள்..கிரேக்கம், இலத்தீன், சமசுகிருதம் மற்றும் இப்ரு...
 2. திராவிடமொழிக் குடும்பத்தில் தாய்மொழியாகப் பேசும் மக்களின் எண்ணிக்கையில் தெலுங்கிற்கு அடுத்த இரண்டாவது இடத்திலுள்ளது...தொன்மையிலும், இலக்கிய, இலக்கண வளத்திலும் திராவிடமொழிக் குடும்பத்தில் தமிழுக்கே முதலிடம்...
 3. இந்திய அரசால் செம்மொழி என அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ்.
 4. இந்தியாவில் அரசியல் சாசனப்படி அங்கீகரிக்கப்பட்ட மொழிகளுள் ஒன்று..தமிழ்.
 5. இந்தியாவில் தமிழ்நாட்டின் ஒரே ஆட்சி மொழியாகவும், புதுச்சேரி, அந்தமான் ஆகிய நடுவண் பிரதேசங்களில் ஆட்சிமொழிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது...
 6. இந்தியாவைத் தவிர, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக உள்ளது...இலங்கையில் சிங்களத்தோடு தேசீய மொழியாகவும் உள்ளது... மேலும் மலேசியா, மோரீசு, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மையினர் மொழியாகத் திகழ்கிறது...

சொல்லாடல்[தொகு]

• "தமிழை "உயர்தனிச் செம்மொழி" என்பர் அறிஞர்
• "நீண்ட தமிழால் உலகை நேமியில் அளந்தான்" - கம்பன்
• "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்"
• "தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"
• “கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி
• "தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்"
• "சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே..."
• "வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!"

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. sweetness, melodiousness
 2. refined quality
 3. Tamil language, being divided into iyaṟ-ṟamiḻ, icai-t-tamiḻ, nāṭaka-t-tamiḻ
 4. Tamil literature, Tamil work
 5. The Tamils
 6. The Tamil country
 • பிரான்சியம்
 1. tamoul (தமுல்), tamil (தமில்)
 • எசுப்பானியம்
 1. tamil (தமில்)
 • இடாய்ச்சு
 1. Tamilisch (தமீலிஷ்), Tamil (தமில்)
 • வங்காளம்
 1. তামিল
 • உருசியம்
 1. Тамильский (தமீல்ஷ்கீ)
 • தெலுங்கு
 1. తమిళము--தமிளமு
 • கன்னடம்
 1. ತಮಿಳು--தமிளு
 • மலையாளம்
 1. തമിഴ്--தமிழ்
 • இந்தி
 1. तमिल--தமில்
 • சமஸ்கிருதம்
 1. तमिज़्--தமிழ்--புதியதாக உருவாக்கப்பட்ட ழ சமஸ்கிருத எழுத்து ज़
 2. இணையான சமஸ்கிருத சொல் ருதம் (ऋतम्)

சொல்வளம்[தொகு]

தமிழ் - தமிழகம், தமிழ்நாடு, தமிழர், தமிழன், தமிழினம், தமிழம் - தமிழாராய்ச்சி
தமிழ்மொழி, தமிழ்த்தாத்தா, தமிழன்னை, தமிழீழம்
தமிழிசை
முத்தமிழ், இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்
செந்தமிழ், கொடுந்தமிழ், தனித்தமிழ்
எழுத்துத்த்மிழ், பேச்சுத்தமிழ்
நெல்லைத்தமிழ், மதுரைத்தமிழ், கோவைத்தமிழ், சென்னைத்தமிழ்
இலங்கைத்தமிழ், மலேசியத்தமிழ், சிங்கைத்தமிழ்
இயல் - இசை - நாடகம் - பைந்தமிழ் - வல்லினம் - மெல்லினம் - இடையினம் - குறில் - நெடில் - உயிர் - மெய் - ஆய்தம் - தொல்காப்பியம்


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தமிழ்&oldid=1887248" இருந்து மீள்விக்கப்பட்டது