கொய்யாப்பழம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (கொய்யா+பழம்)
- கொய்யா எனும் ஒரு கனி வகை
- காழ்ப்பழம்
- ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படுகிறது.
- Psidium Pomiferum--(தாவரவியல் பெயர்)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - guava
- தெலுங்கு - గొయ్యాపండు , జామపండు--(ஒலிப்பு--கொ3ய்யாபந்டு3, ஜாமபந்டு3)
- இந்தி - अमरूद ,जामफल--(ஒலிப்பு--அம்ரூத்3, ஜாம்ப2ல்).
விளக்கம்
- மிக்கச் சுவையுடைய பழமாக இருந்தாலும் நிறைய உண்ணக்கூடாது... இருக்கும் நல்ல குணம் - இரைப்பைக்கு பலம் கொடுப்பதோடு விக்கல் இருப்பின் நிறுத்திவிடும்... மற்றபடி எளிதில் செரிமானம் ஆகாமல் மந்தம், வயிற்றுப்பிசம், அரோசகம் ஆகியவற்றை உண்டாக்கும்... இதன் விதைகள் வயிற்றில் சிக்குமானால் சீதபேதி, உஷ்ண பேதி வரும். கொய்யாப்பழத்தில், வெள்ளை, சிவப்பு நிற வகைகளுண்டு
- கொய்யாப்பழம் எனும் சொல், தமிழ்ச்சொல் அன்று.