கொள்ளு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
கொள்ளு
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
 1. குலுத்தம்
 2. காணம்
 3. முதிரை
மொழிபெயர்ப்புகள்

தாவரத்தோற்றம்[தொகு]

 • நீள்வட்டமாக மூன்றாகப் பிளந்த இலைகளையும், பசுமஞ்சள் நிறமான பூங்கொத்தினையும், நீண்டு வளைந்த காய்களையும், தட்டையான விதைகளையும் உடைய சிறு ஏறுகொடி.செடி முழுவதும் மருத்துவப் பயனுடையது.
பயன்பாடு
 • உணவாக....
 1. கொள்ளு என்பது பயறு வகைகளில் ஒன்றாகும்.
 2. பண்டையக் காலத்தில் இதை குதிரைக்கு உணவாகப் பயன்படுத்தி வந்தனர்...இந்தியாவின் தென் மாநிலங்களிலும் மற்றும் வட இந்தியாவில் பரவலாகவும் அந்தந்த மாநிலச் சமையலில் ஓர் அங்கமாக பலவித உணவுப்பொருட்களைத் தயாரித்து உண்கிறார்கள்...உணவாக மட்டுமின்றி சித்த மருத்துவத்திலும் பயனாகிறது.
 • மருந்தாக....
 1. இதை வேகவைத்து வடித்து எடுத்த நீரில் புளி, காரம், உப்பு சேர்த்து இரசமாகப் பயன்படுத்தினால் உடலிலுள்ள நீரை வற்றச்செய்து குண்டிக்காய், நீர்த்தாரையில் உண்டாகும் கற்களைக் கரைத்துச் சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும்...
 2. இதே இரசம் பெண்களுக்குண்டான உதிரக்கட்டை உடைத்துவிடும்...
 3. உடம்பு சீதளத்தால் குளிர்ந்துவிட்டால் வறுத்தக் கொள்ளு, மஞ்சள், உண்ணும் கற்பூரம் இவைகளைச் சமனெடையாக அரைத்துத் தூளாக்கி உடம்பில் பூசித்தேய்க்க விரைவில் உடல் சூடாகும்..
 4. ஆனால் தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது...உடம்பு சூடேறி பல உபத்திரவங்களை உண்டுசெய்யும்...எனவே எதிர்பார்த்தப் பலன் கிடைத்தவுடன்

உபயோகத்தை நிறுத்திவிடல் நன்று...

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொள்ளு&oldid=1900436" இருந்து மீள்விக்கப்பட்டது