கோலோச்சு
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கோலோச்சு, (வி)
பொருள்
[தொகு]- ஆட்சிசெய்
- பரிபேணாளு
- அதிகாரம் செலுத்து
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- govern
- to rule
விளக்கம்
[தொகு]- கோல் + ஓச்சு = கோலோச்சு...அரசர்களோடு தொடர்புடையச் சொல்...ஓர் அரசன் சிம்மாசனத்தில் அமர்ந்தோ அல்லது வேறு நிலைகளிலோ அரச நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது கையில் அரசுச் சின்னம் பொறித்த ஒரு நீண்ட கோல் வைத்திருப்பார்...அது அவருக்கு ஆளும் உரிமையும், அதிகாரம் செலுத்தும் உரிமையும் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது...ஓச்சு என்றால் செலுத்து(அதிகாரம்) என்றுப் பொருள்...ஆகவே கோலோச்சு என்றால் கோலின் துணைக் கொண்டு அதிகாரம் செலுத்து- ஆட்சி புரி என்றுப் பொருள்...அரசர்கள் கையில் ஒரு கோலை வைத்துக்கொள்ளுவது உலகம் முழுவதும் வழக்கத்திலிருந்தது...இந்தக்கோலை அடிப்படையாக வைத்தே நல்லாட்சி புரிபவரை செங்கோலன் என்றும் கொடிய ஆட்சி புரிபவரை கொடுங்கோலன் என்றும் அழைப்பர்... முடியாட்சியற்ற இக்காலத்திலும் இந்தச் சொல் இதே பொருளில் பயன்பாட்டிலிருக்கிறது...
பயன்பாடு
[தொகு]- பேரரசர் இராசராச சோழன் தற்போதைய ஆந்திரா, கர்நாடகாவின் தென்பகுதி, தமிழ்நாடு, கேரளா, ஈழத்தீவின் வடபுலம் ஆகிய நிலங்களை உள்ளடக்கிய பகுதிகள் முழுவதையும் கோலோச்சினார்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கோலோச்சு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- பிற...[1]