சங்கஞ்செடி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சங்கஞ்செடி, பெயர்ச்சொல்.
- (சங்கம்+செடி)
(Azima Tetracantha...(தாவரவியல் பெயர்))
மருத்துவ குணங்கள்
[தொகு]- இதொரு மூலிகைச்செடி...இந்தச்செடியின் வேருக்கும், இலைக்கும் சோபை, கரப்பான், விதாகம், விரணம், குன்மம், கீல்வீக்கம், வாதகோபம், பித்தநோய், பல நஞ்சு ஆகிய பிணிகள் போகும்...கண் துலக்கமும், அதிகப் பசியும், இரத்த விருத்தியும் உண்டாகும்...
- உபயோகிக்கும் முறை...(இலைகள்)
- இதன் இலைகளை குடிநீரில் போட்டு வாத நோய் கண்டவர்களுக்குக் கொடுக்க நலம் பெறுவர்...இலைகளை அரைத்து சிரங்கு, சொறி, புண், வைசூரி, கொப்பளம் ஆகியவைகளுக்குப் பூசிவர விரைவில் குணமாகும்...இலைச்சாற்றை வயதுக்குத் தக்கபடி குழந்தைகளுக்கு சிறிய அளவுகளில் புகட்டக் கபத்தை வெளியாக்கி இருமலை அடக்கும்...இவ்விலைகளுடன் சமனெடை வேப்பிலை கூட்டி, அரைத்து வேளைக்கு நெல்லிக்காயளவு அந்தியும், சந்தியும் பிரசவித்த பெண்களுக்குக் கொடுத்துவந்தால் பிரசவ பலவீனத்தைப் போக்குவதுடன், எந்தவிதமான சீதளப் பிணியும் வரவொட்டாமல் தடுக்கும்...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- mistletoe berry thorn
- a herbal plant of india--sanganjedi
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +