சிற்றுள்ளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சிற்றுள்ளி
சிற்றுள்ளி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சிற்றுள்ளி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. உணவுக்கான ஒரு தாவரம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. chives

விளக்கம்[தொகு]

  • வெங்காய இனச் செடிகளிலேயே மிகச் சிறிய வகைத் தாவரம்...மேல் நாட்டுச் சமையலில் பெரிதும் பயன்படுகிறது...இலேசான வெள்ளைப்பூண்டு மணமுள்ள இந்தத் தாவரம் ஐரோப்பா, ஆசியா மற்றும் வடஅமெரிக்க கண்டங்களைத் தாயகமாகக் கொண்டது...ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய இது அநேகவிதமான மேற்கத்திய உணவுப்பொருட்களுக்கு மணமும் சுவையும் கொடுக்கவும், பூச்சி எதிர்ப்பு குணமுள்ளதால் தோட்டச் செடி, கொடிகளைப் பூச்சிகளிடமிருந்து காக்கத் தோட்டங்களில் பயிரிட்டும் பயன்படுத்துவர்...இதன் பூக்களும் உணவுப்பொருட்களை அலங்கரிக்கப் பயனாகும்...சிற்றுள்ளியை முழுவுணவாகக் கொண்டால் சீரணக்கோளாறுகள் உண்டாகுமென்பதால் சிறிய அளவிலே பயன்படுத்தப்படுகிறது...மருத்துவத்திலும் வெள்ளைப்பூண்டின் பயன்பாட்டிற்கு ஒப்பப் பயன்பட்டாலும் அதைவிட வீரியம் குறைந்தே காணப்படுகிறது...இதன் பூக்களுக்கு தேனீக்களைக் கவர்கின்ற தன்மையுள்ளதால் மகரந்தச்சேர்க்கை அதிகம் தேவையுள்ள பூக்களைக்கொண்ட செடி கொடிகளுள்ள தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது...இந்தச் செடியினத்தில் பலவகைகள் உள்ளன...இவற்றினிடையே உள்ள வேறுபாடுகளும் குறிப்பிடத்தக்கதாய் இருக்கின்றன...ஆசியாவில் பிரபலமாகயிருக்கும் சிற்றுள்ளி வகையை சீனவுள்ளி என்பர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=சிற்றுள்ளி&oldid=1634412" இலிருந்து மீள்விக்கப்பட்டது