திருப்பதி-திருமலையருகே இருக்கும் சேஷாசல வனத்தில் வாழ்ந்து வரும் அரிய உயிரினங்களில் ஒன்று தங்கப் பல்லி... இது அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளது.இவ்வகை பல்லி, திருமலையில் சக்கர தீர்த்தத்தில் உள்ள பாறைகளின் இடுக்கில் வாழ்ந்து வருகிறது...என்றாவது ஒருநாள்தான் மிக அரிதாக அனைவரின் கண்களுக்கும் தென்படும்... இரவு நேரங்களில் தங்க நிறத்தில் தகத்தகவென மின்னும்...
இந்த தங்கப் பல்லியின் விலங்கியல் பெயர் "காலோடாக்டீலோடஸ் ஆரிஸ்'. இந்த உயிரினம் இரவில் மட்டுமே வெளியில் வரும் ஓர் அரிய வகையைச் சேர்ந்தது... முதிர், இள மஞ்சள் கலந்து தங்க நிறத்தில் ஒளிரும்... இது 150 மி.மீ. முதல் 180 மி.மீ. வரை நீளமாக வளரும்... பெரும்பாலும் கற்பாறை இடுக்குகளில் மட்டுமே வாழும்... சூரியஒளி படாத குளிர்ந்த பிரதேசங்களில் அதிக அளவில் காணப்படும் இந்தப் பல்லி, 40 முதல் 50 முட்டைகள் வரை இடும். சாதாரண பல்லி போலல்லாது விந்தையாக சத்தமிடும்...
இதன் தோற்றத்தைக்காண கீழேகொடுத்துள்ள இணைப்பிற்குச் செல்லவும்...