தங்கவெய்யில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தங்கவெய்யில்--காலை
தங்கவெய்யில்--காலை
தங்கவெய்யில்--காலை
தங்கவெய்யில்--மாலை
தங்கவெய்யில்--மாலை

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தங்கவெய்யில், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. சூரியன் தோன்றும், மறையும் காலத்து வெய்யில்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. dawn and twilight

விளக்கம்[தொகு]

நண்பகலில் வெய்யில் வெள்ளைவெளேரென்று இருக்குமானாலும் சூரியன் உதிக்கும்போதும், மறையும்போதும் வெய்யில் கண்ணுக்கு இதமாக தங்க வண்ணத்தில் கதிர்களைப் பரப்பும்... அத்தருணத்தில் காணும் இடமெல்லாம் வெய்யில் பசும்மஞ்சள்/இளஞ்சிவப்பாக தங்கத்தின் நிறத்தில் கணப்படுமாதலால் தங்கவெய்யில் எனப்படுகிறது...

தங்கவெய்யில் இடம்பெறும் கவிதை[தொகு]

<poem>கங்குல்ப றந்ததடி எங்கும் வெளுத்ததடி தங்கவெய்யில்... கண்டதுகி ழக்கிலே -- நம் கையில் பயன்கொடுக்கத் தையும் பிறந்ததடி காடெங்கும் கன்னல்ப ழக்குலை -- நல்ல களந்தோறும் விளைந்தநெல் அளந்தனர் உழவர் கங்குல்ப றந்ததடி எங்கும் வெளுத்ததடி தங்கவெய்யில்... கண்டதுகி ழக்கிலே

  • பொங்கல் வாழ்த்துக் குவியல்--சிந்துகண்ணிகள்-95-[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=தங்கவெய்யில்&oldid=1218900" இருந்து மீள்விக்கப்பட்டது