உள்ளடக்கத்துக்குச் செல்

தெரிநிலை வினைமுற்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


தேரிநிலை வினைமுற்று

விளக்கம்
  • செய்பொருள் ஆறையும் காட்டும் வினைமுற்று.
  • எ.கா: கயல்விழி மாலை தொடுத்தாள்

இதில் கயல்விழி என்பது வினையை செய்யும் கருத்தா, தொடுத்தாள் என்பது கருத்தாவின் செயலை உணர்த்தும் வினைமுற்று. இச்சொல்லிலிருந்து, செய்பவன் - கயல்விழி கருவி - நார், பூ, கை நிலம் - அவள் இருப்பிடம் செயல் - தொடுத்தல் காலம் - இறந்த காலம் செய்பொருள் - மாலைஆகியவற்றை அறியலாம். இவ்வாறு, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும். இவற்றுள் சில குறைந்து வரும் ஆனால் காலத்தை தெளிவாகக் காட்டும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=தெரிநிலை_வினைமுற்று&oldid=1641487" இலிருந்து மீள்விக்கப்பட்டது