தேங்காய் எண்ணெய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தேங்காய்க் கொப்பரை
எண்ணெய்க்காக உலர்த்தப்படும் தேங்காய்
தேங்காய்
உறைந்த தேங்காய் எண்ணெய்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தேங்காய் எண்ணெய், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. தேங்காய் கொப்பரையிலிருந்து பிழியப்படும் எண்ணெய்


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. oil extracted from dried coconuts


விளக்கம்[தொகு]

  • தேங்காய்க் கொப்பரையிலிருந்துப் பிழியப்படும் தேங்காய் எண்ணெய் நாட்டு மருத்துவத்திலும், உணவுத் தயாரிப்பிலும் மிகவும் பயன்படுகிறது... தமிழ் நாட்டில் உணவுக்காகப் பெரிய அளவில் பயன்படுவதில்லை என்றாலும் கேரள மாநிலத்தில் இதுவே சமையலில் முழுவதுமாகப் பயன்படுத்தப்படுகிறது.. இந்த எண்ணெயைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகைகளில் அவியல் மிகப் பிரபலமானது.
  • இந்த எண்ணெயைக் கூந்தலுக்குத் தடவிவரச் செழிப்பாக வளரும். மேலும் படர்தாமரை, சிரங்கு, அடிப்பட்ட இரணங்களைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.
  • சென்னை பல்கலை..தமிழ்ப் பேரகராதி..தேங்காயெண்ணெய்..[1]]
"https://ta.wiktionary.org/w/index.php?title=தேங்காய்_எண்ணெய்&oldid=1885524" இலிருந்து மீள்விக்கப்பட்டது