உள்ளடக்கத்துக்குச் செல்

எண்ணெய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
எண்ணெய்:
நல்லெண்ணெய்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • எண்ணெய், பெயர்ச்சொல்.
  • (எண் (எள்)+நெய்)
  1. நல்லெண்ணெய்
  2. எண்ணெய் பொது (பிங். )
  3. ஒருமரவகை (L.)

விளக்கம்

[தொகு]
  • பண்டைய தமிழகத்தில் எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்யே பயன்பாட்டிலிருந்தது. பழந்தமிழில் எண் என்றால் எள் என்றாகும். ஆகவே எண்ணெய் என்றாலே எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட நெய் ( எள்+நெய் ) என்றாகியது. பின்நாளில் எல்லா எண்ணெய் (OIL) வகைகளுக்கும் உரிய ஒரு பொதுப் பெயராகிவிட்டது. எண்ணெய் என்பதுதான் சரியான வார்த்தை. எண்ணை என்பது தவறானது.
  • முதலில் குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் சிறப்பாக உணர்த்திப் பின் காலப்போக்கில் பல பொருள்களை உணர்த்திப் பொதுச் சொல்லாதலைப் பொதுப் பொருட்பேறு என்பர். எள்ளிலிருந்து எடுக்கப்படும் திரவப் பொருளை எண்ணெய் என்று தொடக்கக் காலத்தில் வழங்கி, பின் அவ் "எண்ணெய்' என்பதே பொதுப் பெயரால் நின்று தேங்காய் எண்ணெய், நல்ல எண்ணெய், கடலை எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் எனத் திரவப் பொருளுக்குப் பொதுவாய் நின்று, அடைபெற்று வெவ்வேறு வகை குறித்து நின்றது. பூமியிலிருந்து பிற்காலத்தே தோண்டி எடுக்கப்பட்ட எரிபொருளாகிய திரவம் "மண்ணெண்ணெய்" எனப் பெயர் பெற்றதையும் சிந்திக்க வேண்டும். பெட்ரோலியப் பொருள்களுள் ஒன்றான "பெட்ரோல்" என்பதைத் தனித்தமிழ் இயக்கத்தினர் கல்நெய், கன்னெய் எனக் குறிக்கத் தொடங்கினர்.. (நல்ல தமிழ்ச் சொற்கள் அன்றும் இன்றும், முனைவர் ச.சுப்புரெத்தினம், தமிழ்மணி, 27 பிப் 2011)
பயன்பாடு
  • உணவில் எண்ணெய் குறைவாக இருந்தால் நல்லது
  • எள் என்றால் எண்ணெயாக இரு (பழமொழி)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. gingili oil
  2. oil (as common name for all kinds of oil)
பயன்பாடு
  • உணவில் எண்ணெய் குறைவாக இருந்தால் நல்லது
  • எள் என்றால் எண்ணெயாக இரு (பழமொழி)

 :எள் - நெய் - வெண்ணெய் - # - # - #



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எண்ணெய்&oldid=1987069" இலிருந்து மீள்விக்கப்பட்டது