தேவடியாள்
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
தேவடியாள், பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- தேவதாசி
- கோவில்களில் நாட்டியமாடும், பாட்டிசைக்கும் பெண்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- a temple dancer cum singer
விளக்கம்[தொகு]
ஒரு பெண் தேவனுக்கு அடியவள் என்ற பொருளில் தேவடியாள் எனப்பட்டாள்...தேவதாசி முறை நடைமுறையிலிருந்தபோது பெண்களில் சிலர் இறைவனுக்கே தாலிக்கட்டிக்கொண்டு நித்திய சுமங்கலிகளாக கோவில்களில் திருவிழாக் காலங்களில் நாட்டியமாடிக்கொண்டும், பாட்டிசைத்துக்கொண்டும் மக்களை மகிழ்வித்துவந்தனர்...மற்ற நாட்களில் இறைவனுக்கு தொண்டு செய்துக்கொண்டு வாழ்ந்தனர். பின்நாட்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு மிகவும் கேவலமாக நடத்தப்பட்டனர்... கடைசியில் தேவடியாள் என்னும் சொல்லே விலைமாதரைக் குறிக்கும் சொல்லாக, ஒரு வசவுச் சொல்லாக மாறிவிட்டது...
பழமொழி[தொகு]
- ஆடத்தெரியாத தேவடியாளுக்கு முற்றம் கோணலாம்...
- பழமொழி விளக்கம்: அந்தத் தேவடியாளுக்கோ நாட்டியம் ஆடவே வராது...ஆனால் அதை ஒப்புக்கொள்ள தன்மானம் இடம் கொடுக்காது...ஆகவே நாட்டியமாடும் இடமான கோவில் முற்றம் கோணலாக இருக்கிறது அதனால் ஆட முடியாது என்று சொல்லி ஆடுவதிலிருந்து விடுபட்டுக்கொள்ளுவாள்...