நன்னாரி
(கோப்பு) |
நன்னாரி
- Hemidesmus indicus..(தாவரவியல் பெயர்)
- ஒரு கொடிவகை. (பதார்த்த. 492.)
- தென்னிந்தியாவில் வளரும் நிலைத்திணை (தாவரம்) படரும் ஒரு கொடி இனம்
- நன்னாரி வேர் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த வேரை வாங்கி வந்து நன்றாக சுத்தம் செய்து, ஒரு சட்டியில் போடவேண்டும். அதன் பின்னர் இரண்டு அல்லது மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றவேண்டும். நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். கொதித்து முடிந்த பின்னர், அதனை வடிகட்டி, அந்த சாற்றை குடித்து வந்தால் வாத நோய்கள் படிப்படியாக குணமாகும்.
நன்னாரி வேரை எடுத்து நன்றாக இடித்து சாறு எடுத்து வடிகட்டி கொதித்த தண்ணீருடன் கலந்தும் குடிக்கலாம். இதன் காரணமாக தோல் நோய்கள் குணமாகும். நன்னாரி வேர் மற்றும் வெட்டி வேர் இரண்டையும் சம அளவில் எடுத்து மேல் சொன்ன மாதிரி தண்ணீருடன் கலந்து கொதிக்கவைத்து, வடிகட்டி, குடித்து வந்தால் பித்தம், உடல் சூடு தணியும். வெட்டி வேர் உடலின் பித்தம் தணிவதற்கு மிகவும் துணை புரியும்.
நன்னாரி - நெருஞ்சில் இரண்டையும் சம அளவில் எடுக்கவேண்டும். மேல் சொன்ன மாதிரி கஷாயம் வைத்து குடித்தால் சிறுநீரகக்கற்கள், பித்தப்பை கற்கள் கரையும்.
நன்னாரி, தனியா, சோம்பு - இந்த மூன்றையும் சம அளவில் எடுத்து கசாயம் தயாரித்து குடித்து வந்தால் உடல் பருமன் குறையும்.
நன்னாரி வேரை நெல்லிக்காய் சாறுடன் கலந்து நன்றாக ஊற வைத்து உலர்த்தி பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். இதனை வெந்நீருடன் கலந்து குடித்து வந்தால் கொழுப்பு கரையத்தொடங்கும். கொழுப்பு கரையும்போது, இதயம் வலுவடையும்.
நன்னாரி சிறந்த மூலிகை குணம் கொண்டது.
- ஆங்கிலம் - sarsaparilla