நோர்வே மொழி (பூக்மோல்)
நோர்வே மக்களால் பேசப்படும் நோர்வே மொழியின், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரு மொழி வடிவங்களுள் ஒன்றாகும். இதுவே அதிகளவிலான மக்களால் பயன்படுத்தப்படும் எழுத்து வடிவமாக உள்ளது. நோர்வேயில் 85-90% மக்கள் இவ்வடிவத்தையே பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன் வெளிநாட்டு மாணவர்களுக்கு இந்த மொழி வடிவமே கற்பித்தலில் பயன்படுத்தப்படுகின்றது.