உள்ளடக்கத்துக்குச் செல்

பகல்தீவட்டிக்கொள்ளைக்காரன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பகல்தீவட்டிக்கொள்ளைக்காரன்:
சுடுகலன் ஏந்திய ஓர் இந்தியக் கொள்ளைக்காரன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • பகல் + தீவட்டி +கொள்ளை-காரன் = பகல்தீவட்டிக்கொள்ளைக்காரன்

பொருள்

[தொகு]
  • பகல்தீவட்டிக்கொள்ளைக்காரன், பெயர்ச்சொல்.
  1. பகற்கொள்ளை யடிப்போன் (உள்ளூர் பயன்பாடு)
  2. அநியாயமாய் வரும்படி தேடுபவன் (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. one who commits dacoity by daylight
  2. a person who seeks large, unreasonable gain

விளக்கம்

[தொகு]
  • பண்டையக்காலத்தில் கொள்ளையடிப்போர் ஒரு குழுவாக அமைந்து, பிடிப்பட்டால் வழுக்கித் தப்பிக்க, உடம்பெல்லாம் எண்ணெய்ப்பூசிக்கொண்டு, இரவு நேரங்களில் கைகளில் தீவட்டி ஏந்திக் கிராமத்து வீடுகளைக் கொள்ளையடிப்பர் என்பர்...அந்தக் கொள்ளையரே பகல் வேளையிலும் கொள்ளையடிக்க முற்படும்போது அவர்கள் பகல்தீவட்டிக்கொள்ளைக்காரன் என்று அழைக்கப்பட்டனர்...
  • தயவு தாட்சணியம் பாராமல் மிகக்கடுமையாக நடந்துக்கொண்டு பெரும் தொகையாக, கடன் கொடுத்தப் பணத்திற்கு, முறையில்லாமல், அநியாயமாக, வட்டி ஈட்டுபவர்களையும், வேறெந்த வகையிலாவது, பிறரை வருத்தித், தகாதப் பெரும் ஆதாயத்தைத் தேடுபவர்களையும்கூட இந்தப் பெயராலேயே அழைப்பர்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +