பகல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

[[|thumb|250pxpx||பகல்:
எனில் சூரியன் என்பது ஒரு பொருள்]]

பகல்:
எனில் அக்குள்/கமுக்கட்டு என்பதும் ஒரு பொருள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • பகல், பெயர்ச்சொல்.
 1. பகுக்கை (பிங். )
  (எ. கா.) நெருநைப் பகலிடங் கண்ணி (புறநா. 249).
 2. நடு (திவா.)
 3. நடுவுநிலைமை
  (எ. கா.) அகல்வையத்துப் பகலாற்றி (பதிற்றுப். 90, 9).
 4. நுகத்தாணி
  (எ. கா.) நெடுநுகத்துப் பகல்போல (பட்டினப். 206).
 5. முகூர்த்தம் (பிங். )
  (எ. கா.) ஒருபகல் காறு நின்றான் (சீவக. 2200). 206).
 6. அரையாமம்
  (எ. கா.) அரையிருள் யாமத் தும் பகலுந் துஞ்சார் (சிலப். 4, 81)
 7. மத்தியானம் (பேச்சு வழக்கு)
 8. காலைமுதல் மாலைவரையுள்ள காலம்
  (எ. கா.) பகல் விளங்குதியாற் பல்கதிர் விரித்தே (புறநா.8)
 9. இளவெயில்
  (எ. கா.) பாய்குழை நீலம் பகலாகத் தையினாள் (பரிபா. 11, 96)
 10. அறுபது நாழிகைகொண்ட நாள். (திவா.)
  (எ. கா.) ஒல்வ கொடாஅ தொழிந்த பகலும் (நாலடி. 169). )
 11. ஊழிக்காலம்
  (எ. கா.) துஞ்ச லுறூஉம் பகலுறு மாலை (பதிற்றுப். 7, 8) )
 12. சூரியன்
  (எ. கா.) பன்மலர்ப் பூம் பொழிற் பகன் முளைத்ததுபோல் (மணி. 4, 92). )
 13. பிரகாசம் (திவா.) (ஒப்பிடுக)பகர்
 14. வெளி (சீவக. 1596, உரை.)
 15. கமுக்கட்டு (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. dividing, separating
 2. middle
 3. middle position,impartiality
 4. middle or main peg in a yoke
 5. period of two nāḻikai
 6. half of a yāmam
 7. midday, noon
 8. day, day time, as divided from the night
 9. the morning sun
 10. day of 24 hours
 11. the day of destruction of the universe
 12. sun
 13. light, radiance, splendour
 14. open place, openness
 15. armpit

விளக்கம்[தொகு]

 • மேற்கண்ட அர்த்தங்களில் கடைசியான கமுக்கட்டு என்னும் பொருளுக்குத் தமிழில் வழங்கும் பகல் என்னும் சொல்லுக்கு வேர்ச்சொல் உருது மொழி bagal என்பதாகும்.சொல்வளம்[தொகு]

பகல் - பகலவன்
பகல் கனவு, பகற்பொழுது, பகற்காட்சி
நண்பகல், பிற்பகல், முற்பகல்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - பகல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பகல்&oldid=1635181" இலிருந்து மீள்விக்கப்பட்டது