பகுப்பு பேச்சு:பெயர்ச்சொற்கள்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle
இப்பகுப்பில் உள்ள துணைப்பகுப்புகளை மொழிக்குடும்பம் வாரியாக பிரித்தால் சரியாக இருக்கும் அல்லது நிலப்பிரிவு வாரியாகப் பிரித்தால் சரியாக இருக்கும். ஆங்கிலத்தைத் தனியாக பிரிப்பதும், தமிழ்-இந்திய மொழிகள அல்லாத பிறமொழிகள் என்று பிரிப்பதும் தனிச்சாய்வு காட்டுவதாகும். இப்படியான துணைப்பகுப்புகள் வேண்டுமா? ஒவ்வொரு மொழிக்கும் ஒரு துணைப்பகுப்பு இருதால் போதும் என்று நினைக்கின்றேன். --செல்வா 21:59, 24 மே 2011 (UTC)
- ஒவ்வொரு மொழிக்கும் ஒரு துணைப்பகுப்பு இருதால் போதும் என்பதில் உடன்படுகிறேன். (மொழிக் குடும்பம் /நிலப்பகுதி கூடத் தேவையில்லை) பெயர்ச்சொல் என்பதில் தமிழ் இடம்பறுகிறது. பிற மொழிகளுக்கு மட்டும் xமொழி-பெயர்ச்சொல் என்ற முன்னொட்டு உள்ளது. இதனை மாற்றி தமிழுக்கும் கொண்டு வரவேண்டும். நாம் முதலில் தமிழில் மட்டும் சொற்கள் சேர்க்கத் தொடங்கியதால், முதன்மைப் பகுப்புகளாக அவை இருந்து விட்டன (பிற மொழிகள் பின் தோன்றத் தொடங்கிய போது, அதற்கு முன்னொட்டு சேர்த்துள்ளோம்). பிற விக்சனரி வழமைகளின் படி, “பெயர்சொல்”, வினைசொல்” பகுப்புகள் பொதுமையானதாகவும் ஒவ்வொரு மொழிக்கும் (தமிழ் உட்பட) “மொழி-பெயர்ச்சொல்” என்று மாற்ற வேண்டும். இப்போது தமிழ் முதன்மை பகுப்பில் இடம் பெற்றுள்ளதால், விக்கியிடை இணைப்புகளும் பொருந்த இட முடியாத வாறு உள்ளது --Sodabottle 03:38, 25 மே 2011 (UTC)
- நம் விக்சனரியில் அதிகமானோர் ஆங்கில மொழிபெயர்ப்பையே நாடுகின்றனர்.நம்மொழி என்பதால் தமிழுக்கு முதல் இலக்கம். ஆனால், நம் மொழியிலிருந்து அதிக மொழிபெயர்ப்புகள், இல்லையென்பது, நமக்கு இழுக்கல்லவா? ஆங்கிலத்திற்கு இரண்டாம் இலக்கம்.அதிகம் மொழிகளுள்ள இந்தியாவிற்கு, மூன்றாம் இலக்கம். மற்ற உலகமொழிகளுக்கு கடைசி இலக்கமான9.மற்ற நில எல்லைகளுக்குத் தகுந்தவாறு தேவைப்படின், இலக்கமிட பிற எண்கள். ஒரு வசதிக்காகவே இவ்வாறு அமைக்கப்பட்டது. இதில் எந்த ஒரு அறிவியல் நோக்கமுமில்லை.தேவைப்படின் நாம் உருவாக்கிக் கொள்ளலாம். மற்ற உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு கருவி இருக்கிறது. இந்திய மொழிகளுக்கு? குறிப்பாக தமிழிலிருந்து, பிற மொழிகளுக்கு செல்ல நமது உழைப்பு, மொழிபெயர்ப்பு கருவியை உருவாக்குபவருக்கு, உறுதுணையாக எதிர்காலத்தில் இருக்க விரும்புகிறேன்.
- en:Category:Animals என்பதில் அவர்கள் தாய்மொழி என்பதால் எந்த ஒரு முன்னொட்டும் அமைக்காமல் இருக்கின்றனர். தாய் மொழி தமிழில், நாமும் பகுப்பு:விலங்குகள் என்ற பகுத்தாலே போதும். பகுப்பு:ஆங்கிலம்-விலங்குகள் என்பது மற்ற மொழிகளுக்கு எடுத்துக்காட்டாகும். பிறமொழிகளுக்கு, இம்மொழிக்குறிப்பு முன்னொட்டு அவசியமே.அதோடு மட்டுமில்லாமல் நமது எழுத்துக்கள் பிற மொழிகளில் பயன்படுத்துவதில்லை.ஆனால்,ஆங்கில எழுத்துக்கள் பிற மொழிகளில் பயன்படுத்துவதால் முன்னொட்டு அவசியமே.அதனால் தான் அங்கு பெயர்ச்சொல் பகுப்புப் பயன்படுத்துகின்றனர்.மற்றவற்றிற்கு பயன்படுத்துவதில்லை என்று புரிந்து கொண்டு அமைத்தேன்.
- விக்கியிடை இணைப்புகளை நாம் தான் உருவாக்கவேண்டும். பல பகுப்புகளில் அதனை இன்னும் உருவாக்கவேண்டும்.என்னால் இயன்றவரை உருவாக்கியுள்ளேன். முன்பு ஒரு முறை,பிறமொழி நிருவாகி, நமது விக்கியில் அது பற்றிக் குறைக்கூறி குறிப்பிட்டிருந்தார்.(காண்க:6 Interwikis in categories) அதன்படியே, விக்கியிடை இணைப்புகள் பகுப்புகளுக்கு நாம் உருவாக்குதலே சிறந்தது. அவரும் அத்தகு செயலுக்கு மகிழ்ச்சியைத் தெரிவித்திருந்தார். எனவே,விக்கியிடைத் தானியங்கிகள், அத்தகைய விக்கியிடை பகுப்பு இணைப்புகளை சிறப்பாக உருவாக்கச் செயல்படுத்தப் படுவதில்லை. தொடர்ந்து ஆலோசிப்போம். செயற்படுவோம்.--19:23, 25 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..