பந்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பந்தம்:
முடிச்சு
பந்தம்:
மயிர்முடி
பந்தம்:
மதில்
பந்தம்:
கைவிளக்கு
பந்தம்:
தீவட்டி
(கோப்பு)

பொருள்[தொகு]

 • பந்தம், பெயர்ச்சொல்.
 1. முடிச்சு (யாழ். அக.)
 2. கட்டு (பிங்.)
 3. பாசம்
  (எ. கா.) பந்தமும் வீடும் பரப்புகின்றீர் (தேவா. 586, 2).
 4. ஆன்மாவைப் பிணித்துள்ள பாசம் (சீவக. 814 உரை.)(Jaina.)
 5. உறவு
  (எ. கா.) பந்தமுடையான் (இனி. நாற்.)
 6. சம்பந்தம்
 7. பற்று
  (எ. கா.) நந்தும் . . . பந்தமிலாளர் தொடர்பு (நாலடி. 234).
 8. பாவின் தளை
  (எ. கா.) பந்த மடிதொடை (காரிகை. தற்சிறப்.).
 9. முறைமை
  (எ. கா.) பந்தநீர் கருதாதுலகிற் பலிகொள்வதே(தேவா. 425, 7).
 10. கட்டுப்பாடு (அரு. நி.)
 11. மயிர்முடி (பிங்.)
 12. சொத்தைப் பராதீனப்படுத்துகை (பேச்சு வழக்கு)
 13. மதில் (பிங்.)
 14. அழகு (பிங்.)
 15. கைவிளக்கு (பிங்.)
 16. தீவட்டி
 17. தீத் திரள்
  (எ. கா.) பந்தமெரிந்தாற்போல (இராமநா. உயுத்.)
 18. உருண்டை (பிங்.)
 19. பொன் (பிங்.)
 20. நூலிழை. (பிங்.)
 21. பெருந்துருத்தி (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. Tie
 2. Bandage, ligature
 3. Bondage, earthly attachment, opp. to mōṭcam
 4. (Jaina.) Bondage of the soul by karma, one of nava-patārttam
 5. Relationship, kindred
 6. Link, connection
 7. Affinity, tie of friendship, attachment
 8. Metrical connection of the last syllable of a foot with the first syllable of its succeeding foot
 9. Social code, custom, law
 10. Constitution, binding agreement
 11. Tied hair
 12. Encumbrance on property; alienation of property
 13. Surrounding wall, fortification
 14. Beauty
 15. Lamp
 16. Torch, flambeau
 17. Fireball
 18. Ball, anything globular
 19. Gold
 20. Yarn, single twisted thread
 21. A large kind of bellows

● மலையாளம்

ബന്ധം(bandhaṁ)- for relation

( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பந்தம்&oldid=1968852" இருந்து மீள்விக்கப்பட்டது