உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:உமாசுதன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--ரவி 09:47, 18 ஆகஸ்ட் 2006 (UTC)உமாசுதன், வந்த வேகத்தில் புதுச் சொற்களை நீங்கள் உருவாக்குவது கண்டு மகிழ்ச்சி. புது ஆங்கிலச் சொற்களை உருவாக்கும் போது, தலைப்பில் முதல் எழுத்து உட்பட அனைத்து எழுத்துக்களையும் சிறிய எழுத்துக்களிலேயே தாருங்கள். அதுவே இத்தளத்தில் உள்ள நடைமுறை. நன்றி.--ரவி 13:16, 18 ஆகஸ்ட் 2006 (UTC)

உமாசுதன், என் வேண்ண்டுகோளை ஏற்று, சில சொற்களுக்கு அனைத்தும் சிறு எழுத்துக்களாக எழுதி உள்ளீர்கள். நன்றி. எனினும், சில சொற்களுக்கு மறந்து விட்டீர்கள் போலும் :) இதை தவறாமல் பின்பற்றுமாறு வேண்டிக் கொள்கிறேன். தொழில்நுட்பக் காரணங்களுக்காகவும் மொழியியல் காரணங்களுக்காகவும் இது அவசியமாகிறது. ஆங்கில சொற்களை ஒத்த spelling உடைய சில ஜெர்மன் சொற்கள் பெரிய எழுத்துகளில் தொடங்குவதுடன் வேறுபட்ட பொருளைக் கொண்டுள்ளன. எனவே இச்சொற்களை வேறுபடுத்திக் காட்ட அனைத்து ஆங்கில சொற்களையும் சிறு எழுத்துகளில் (தலைப்புகளில் மட்டும்) எழுதுவது அவசியமாகிறது. எடுத்துக்காட்டுக்கு art மற்றும் Art ஆகிய இரு பக்கங்களுக்கான வேறுபாடுகளைப் பாருங்கள்--ரவி 08:20, 19 ஆகஸ்ட் 2006 (UTC)

பார்கவும் விக்சனரி:புதுப் பயனர் பக்கம்--ரவி 14:25, 20 ஆகஸ்ட் 2006 (UTC)

உமாசுதன், [[வேலி அமைக்கக்கூடிய]] என்று முழு சொல் விளக்கத்துக்கும் சிகப்பு இணைப்பு வருமாறு [[]] குறி இட வேண்டாம். "[[வேலி]] அமைக்கக்கூடிய" என்பது போல் இணைப்பு தரவும். இதே பரிந்துரை உங்கள் மற்ற பக்கங்களுக்கும் பொருந்தும். முக்கியமான சொற்களுக்கு மட்டும் இணைப்பு வருமாறூ பார்த்துக் கொள்ளவும். Please read more clear explanation in விக்சனரி:புதுப் பயனர் பக்கம்--ரவி 14:22, 24 ஆகஸ்ட் 2006 (UTC)

[[உணர்விழந்த]], என்று இணைப்பு தருவதற்கு பதில் [[உணர்வு|உணர்விழந்த]] என்று இணைப்பு தாருங்கள். அதுவே இங்கு பின்பற்றப்படும் சரியான இணைப்பு முறையாகும். நன்றி--ரவி 19:13, 24 ஆகஸ்ட் 2006 (UTC)

Copyright violation[தொகு]

umasuthan, i find that you are providing the word meanings from sinhala-tamil dictionary as it is without any change. This may not be welcomed in tamil wiktionary as that sinhala-tamil dictionary has given copyright warning. If we use it as it is, it may lead to copyright troubles in the future for this site. Also, it is a waste of time and effort to reproduce which is already in the web. Please try to give meaning in ur own words or from free sources like tamil virtual university dictionary. thank you.--ரவி 09:01, 25 ஆகஸ்ட் 2006 (UTC)

umasuthan, please do not discard the copyright notice given in the sinhala-tamil site. If you continue to add word meanings as it is from that site, we may have to consider blocking your user id here. Please give word meanings in own words or from free sources. thanks again--ரவி 09:08, 25 ஆகஸ்ட் 2006 (UTC)

umasuthan, forgive me for writing in english as i am writing to u from university. Thanks for understanding our copyright violation concern. it's true that v cannot copyright word meanings. but presenting the words exactly in the same order without even a single small change is questionable when the copyright warning in the sinhala site is very clear. Even lifting words as it is from published books like lifco tamil dictionary, kriya tamil dictionary are also not welcome. It can be accepted if the meanings are lifted for one or two difficult words by a user. But this cannot be encouraged if it is done for all words, that too even for simple words. Though other users might edit, add something to the page and make it look like a "clean" page in the long run. More sources for tamil dictionaries online are given at Wiktionary:சமுதாய வலைவாசல்#பயனுள்ள இணைப்புகள். To use the tamil vitual university dictionary as a source for difficult words is accpeted. Generally, we welcome users to add, explain word meanings in their own words. This is the least problematic way to get rid of copyright troubles. thanks--ரவி 10:00, 25 ஆகஸ்ட் 2006 (UTC)

எடுத்துக்காட்டுகள்[தொகு]

உமாசுதன், எடுத்துக்காட்டுக்கு constitute பக்கத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை கவனிக்கவும். இது dictionary.com தள தகவல் உதவியுடன் செய்யப்பட்டது. இது போன்ற மாற்றங்கள், விளக்கங்களை இங்கு வரவேறுகிறோம். இதன் மூலம் பக்கங்கள் அதிக பயனுள்ளதாக மாறுவதோடு, சொற்பொருள்களை அப்படியே வெட்டி ஒட்டுவதன் மூலம் வரும் காப்புரிமை சிக்கல்களையும் தவிர்க்கலாம்--ரவி 22:18, 25 ஆகஸ்ட் 2006 (UTC)

குறிப்பு[தொகு]

உமாசுதன், நீங்கள் பக்கங்களை உருவாக்கும் வேகம் மலைக்க வைக்கிறது. நன்றியும் பாராட்டுக்களும். சில குறிப்புகள் - பல முறை நான் விளக்கியும் நான் இன்னும் தெளிவாக விளக்கவில்லையோ என்று குழம்ப வேண்டியிருக்கிறது. தயவு செய்து தமிழ் சொற்களுக்கான இணைப்புகளைத் தரும்போது, ஒற்றைச் சொல்லுக்கு தாருங்கள். எடுத்துக்காட்டுக்கு, [[மக்கள்தொகை கட்டுப்பாடு]] என்று இணைப்பு தருவது மிகவும் பிழையாகும். [[மக்கள்தொகை]] [[கட்டுப்பாடு]] என்று இணைப்பு தருவதே சரியாகும். இது போன்ற திருத்தங்களை வேறு ஒரு பயனர் மேற்கொள்வதால், கால விரயம் ஆகிறது. தயவு செய்து இதை தவிர்க்கவும். இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள தயவு செய்து விக்சனரி:புதுப் பயனர் பக்கம் என்பதை இன்னும் ஒருமுறை முழுமையாகப் படிக்கவும். பிறகு, raise kids, raise your eyebrows போன்ற சொற்றொடர்களுக்கான பொருட்களை சேர்ப்பது அவ்வளவு பயனுள்ளதாகத் தோன்றவில்லை. ஏனெனில், இச்சொற்றொடர்கள் நேரடியான பொருளையே தருகின்றன. raise, eyebrow, kid ஆகிய தனிச்சொற்களுக்கு பொருள் அறிவதன் மூலம் இச்சொற்றொடர்களின் பொருளையும் அறிய முடியுமே..தவிர, raise, kid போன்ற சொற்களை கொண்டு எண்ணற்ற சொற்றொடர்களை உருவாக்க முடியும். இவை அனைத்துக்கும், பொருள் தருவது இயலாத வேலை. அவசியமும் அன்று. dictionary.com போன்ற தளங்களிலும் இவ்வாறான சொற்றொடர்களுக்கு பொருள் காண இயலாது. மாற்றாக, raise, kid ஆகிய பக்கங்களில் சொற்பொருள்களுக்கான எடுத்துக்காட்டு வாசகங்களாக இவற்றை நீங்கள் சேர்க்கலாம். எடுத்துக்காட்டு வாசகங்கள் உள்ள இப்பக்கத்தை ஒரு முறை பார்க்கவும். பிறகு, நேரடி பொருளை தராத phrasesகளுக்கு விக்சனரியில் பொருள் சேர்க்கலாம். (எடுத்துக்காட்டு - kick the bucket). இது போன்ற சொற்களுக்கான பொருளை எப்படி சேர்ப்பது என்பது குறித்த நடைக்கையேட்டை இன்னும் சேர்க்கவில்லை. எனவே இவ்வகை phraseகளை இன்னும் கொஞ்ச காலத்திற்கு சேர்க்காமல் இருக்க வேண்டுகிறேன். விரைவில் இதற்கான பரிந்துரைகளை உருவாக்குவோம். விக்சனரியில் உருவாக்கத் தேவைப்படும் சொற்கள், கூட்டுச் சொற்கள் ஆகியவற்றின் சில பட்டியல்களை இங்கு காணலாம். இவற்றை முன்னுரிமை கொடுத்து நீங்கள் உருவாக்கினால் மிகவும் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 08:18, 29 ஆகஸ்ட் 2006 (UTC)


மண்ணிக்கவும் உருவாக்கும் வேகத்தில் தவறு விட்டுவிட்டேன்.... இனிமேல் கவனமாக...தொகுக்கின்றேன் உமா

உமாசுதன், மன்னிப்பு எல்லாம் பெரிய வார்த்தை..அது விக்சனரியில் இருக்கலாமே தவிர விக்சனரி பங்களிப்பாளர்களின் அகராதியில் இருக்கக் கூடாது :) எல்லாரும் இப்படித் தான் கற்றுக்கொண்டோம். தொடரும் உங்கள் பங்களிப்பு பிற பயனர்களுக்கும் உற்சாகத்தை தரும். நன்றி--ரவி 11:49, 29 ஆகஸ்ட் 2006 (UTC)உமாசுதன், சொற்களை சேர்க்கும்போது ஒருமைச் சொற்களாக சேருங்கள். சொல்லே பன்மையாக மட்டுமே பயன்படுத்தப்படும் இனங்களில் மட்டும் இது விதிவிலக்கு (எடுத்துக்காட்டு - scissors என்பது சரி. scissor என்பது பிழை). ஆகவே, actions, references என்பது போன்ற சொற்சேர்க்கைகளை தவிருங்கள். இது தான் அனைத்து அகராதிகளிலும் உள்ள வழக்கம். உங்கள் பங்களிப்புகளில் கட்டுப்பாடுகள் விதிப்பது போல் தயவுசெய்து பிழையாக கருதி விட வேண்டாம். அனைத்து பயனர்களும் பொதுவான ஒழுங்குடன் பங்களிப்பது தளத்தின் தரத்தை கூட்டும். தவிர, தொடக்கத்திலேயே சொல்லிவிட்டால், நீங்கள் தவிர்க்கப்படக்கூடிய பங்களிப்புகளை செய்யாமல் இருப்பதன் மூலம் நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்தலாம். நீங்கள் உருவாக்கியதை பிறர் நீக்குவது உங்களுக்கும் பிறருக்கும் உவப்பாக இருக்காது தானே? குறைந்த பங்களிப்பாளர்களே தற்பொழுது இருப்பதால் விரிவான வழிகாட்டல் பக்கங்கள், உதவிப் பக்கங்கள் உருவாக்கப்படவில்லை. விரைவில் செய்ய முயல்கிறேன். உங்களுக்கு விக்சனரி நடை புரிபடத்தொடங்கியபின் நீங்களும் இது போல் பிற பயனர்களுக்கு உதவியாய் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். --ரவி 11:58, 29 ஆகஸ்ட் 2006 (UTC)


விக்சனரிப் புயலே! உங்கள் சூராவளி வேகம் எங்களை அசரச் செய்கிறது. இரண்டே வாரத்தில் கிட்டத்தட்ட 500 வார்த்தைகள் நுழைத்திருக்கிறீர்கள்! பாராட்டுக்கள்! உங்கள் வேகத்தைக் குறைக்காமல் விக்சனரியை விரிவுபடுத்துங்கள். ஒரு வேண்டுகோள்: பக்கத்தைத் தொகுக்கும் போது, இறுதியில் 'சுருக்கம்' என்றொரு பெட்டியைக் காணலாம். அதில் உங்கள் மாற்றத்தின் சுருக்கத்தை நிறப்புங்கள். அண்மைய மாற்றங்களைக் காணும்போது மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும். நன்றி. --Omanickam 05:37, 31 ஆகஸ்ட் 2006 (UTC)

No plural words please[தொகு]

For a while, please do not add plural form of words (ex:stars). Most probably they might be deleted according to wiktionary policy and it is not pleasing to see your time and effort going wasted. thank you evry much for your understanding and enthusiasm--ரவி 09:43, 31 ஆகஸ்ட் 2006 (UTC)

குறிப்பு[தொகு]

உமாசுதன், சில சொற்களை உருவாக்கும் போது சொல் வகைகளில் பிழை விடுகிறீர்கள். எடுத்துக்காட்டாக, unattractive என்பது உரிச்சொல் (adjective). அதை உருவாக்க பெயர்ச்சொல் உருவாக்கப் படிவத்தை தவறுதலாகப் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இதை கவனத்தில் கொள்ளவும். உங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைப்பேசி எண்ணை நீங்கள் விரும்பினால் அறியத்தரலாம். உங்களை தொடர்பு கொள்வதற்கு பயனுள்ளதாக இருக்கும். பிறகு, தற்பொழுது நீங்கள் உருவாக்கி வரும் சொற்பொருள்கள் ஏதேனும் ஆதார நூல் அல்லது தளத்தில் இருந்து எடுக்கப்பட்டதா என்றும் தெரியப்படுத்தவும்.நன்றி--ரவி 13:20, 31 ஆகஸ்ட் 2006 (UTC)

உட்புகுத்தும் வேகத்தி உரிச்சொல்,வினைச்சொல் பாக்கவில்லை இனிகவனம் எடுக்கின்றேன்..

http://www.tamil.net/learn-tamil/tamildic.html இந்த இணைய தளத்திலிருந்து எடுத்த PDF முலமே நான் தொகுக்கின்றேன். எனினும் சிலபிழைகளை நான் கண்டு திருத்தினேன் ஆனால் சிலவற்றை கோட்டை விட்டுவிட்டேன்... அவ்வாறுபிழை இருக்கும் சொல்லை காட்டினால் பிழையிருப்பின் திருத்துகிறேன் அல்லது ஆதாரத்தைக்காட்டுகிறேன். உமா 07:01, 31 ஆகஸ்ட் 2006 (UTC)

  1. மறுமொழிக்கு நன்றி உமா. அப்புறம், சொற்களை உருவாக்கும் போது # குறிக்கு அடுத்து ஒரு இடம் விட்டு எழுத ஆரம்பியுங்கள். சிறிய மாற்றங்களுக்கான விளக்கங்களை தொகுத்தல் சுருக்கத்தில் தருகிறேன். பெரிய மாற்றங்கள் எனில் அந்தந்த சொற்களுக்கான பேச்சுப்பக்கங்களில் குறிப்பு விடுகிறேன். நீங்களும் சொற்களுக்கான பொருளை தொகுத்தல் குறிப்பில் விட்டால் பிற பயனர்கள் அவற்றை அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் இருந்து பார்க்க இயலும். பேச்சுப் பக்கங்களில் கையெழுத்திட, இந்தத் தொகுப்பு பெட்டிக்கு மேல் உள்ள பொத்தான்களில் வலமிருந்து இரண்டாவது பொத்தானை அழுத்தவும். நன்றி--ரவி 13:36, 31 ஆகஸ்ட் 2006 (UTC)
இங்கு சென்று, பயனர் மாணிக்கத்தை தமிழ் விக்சனரி நிர்வாகியாகத் தேர்ந்தெடுப்பது குறித்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவும். நன்றி--ரவி 16:26, 31 ஆகஸ்ட் 2006 (UTC)Please see the pages created by you which were deleted and the reasons for that at the page delete log. This will help you to save your time and effort in future by avoiding such contributions. Pardon me for writing in english. But, just wanted to leave the message when u were online. Your daily visits and contributions are a big boost for this site. Thanks--ரவி 09:16, 4 செப்டெம்பர் 2006 (UTC)Reply

பாராட்டுக்கள்[தொகு]

உமா, நீங்கள் சொற்களை சேர்க்கும் வேகம் தலைசுற்ற வைக்கிறது :) மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு விக்சனரி மீது சிறப்பான ஆர்வம் ஏற்படக் காரணம் ஏதும் இருந்தால், உங்கள் பயனர் பக்கத்தில் குறிப்பிடுங்களேன். பிறருக்கு ஊக்கமளிப்பதாகவும் ஒத்த கருத்து உள்ளவர்களை விக்சனரிக்கு ஈர்ப்பதற்கும் அது பயன்படும். விக்சனரி உங்களுக்கு எப்படி அறிமுகமானது என்றும் தெரிவித்தால் நன்றாக இருக்கும். --ரவி 07:51, 13 செப்டெம்பர் 2006 (UTC)Reply

நானும் விக்கியும்[தொகு]

நான் ஒரு தமிழ் பண்டிதரோ, மேதையோ அல்ல. தட்டச்சு பொறிக்கத் தெரிந்த ஒரு தமிழன்.....

4 வருடங்களுக்கு முன்பிருந்தே விக்கியை நான் அறிவேன், அனால்

  1. இவ்வருட இலக்கு - 10,000 சொற்கள் - உமாசுதன்.
உமா, உங்கள் இலக்கு குறித்து அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மார்ச் 2007ல் 10, 000 சொற்கள் என்று நான் இலக்கு வைத்திருந்தேன். தனியாளாக அதை செய்வதை விட பல பயனர்கள் உதவியோடு செய்ய அதை முயன்று விக்சனரி பற்றிய விழிப்புணர்வு பரப்பும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். விரைவில் ஒரு சில பயனர்களாவது இணைவர் என்று எதிர்ப்பார்க்கிறேன். உங்களை போன்றோரின் முயற்சிகளால் நம் இலக்கு சாத்தியப்படும் என்று நம்புகிறேன். நன்றி--ரவி 21:05, 13 செப்டெம்பர் 2006 (UTC)Reply

புதிய சொல் - பரிசோதனை[தொகு]

உமா, புதிய சொற்கள் சேர்க்கும்போது, இந்தப் பக்கத்தை பரிசோதித்துப் பாருங்கள். உங்கள் யோசனைகளை அந்தப் பக்கத்தின் உரையாடல் பகுதியில் தெரியப்படுத்துங்கள். நன்றி. --Omanickam 22:59, 20 செப்டெம்பர் 2006 (UTC)Reply

நன்றி[தொகு]

உமாசுதன், பலுக்கல் வார்ப்புருக்களை சேர்த்து விக்கியாக்கத்துக்கு உதவுவதற்கு நன்றி. இது போன்ற சிறு தொகுப்புகளை செய்யும்போது, தொகுப்புப் பெட்டிக்கு கீழ் உள்ள இது ஒரு சிறு தொகுப்பு என்ற விருப்பத்தேர்வை தெரிவு செய்யுங்கள். பலுக்கல் வார்ப்புருக்களை சேர்ப்பதோடு அல்லாமல் பக்கத்தில் உள்ள பிற குறைகளையும் கவனித்து தீர்க்கலாம்--ரவி 13:23, 20 நவம்பர் 2006 (UTC)Reply

உள்ளிணப்பு தரும் முறை[தொகு]

உமாசுதன், பல முறை உங்களுக்கு எடுத்துக் கூறியும் இன்னும் நான் தெளிவாக விளக்கவில்லையோ என்று எனக்கே குழப்பமாக இருக்கிறது. [[முட்டையின்]] மஞ்சள் கரு என்று உள்ளிணைப்பு தருவது தவறு. [[முட்டை]]யின் மஞ்சள் கரு என்று தாருங்கள். அது போல் [[வள்ளிக்]] கிழங்கு என்று தருவது தவறு. [[வள்ளிக் கிழங்கு]] என்று சேர்த்து தாருங்கள். வள்ளி வேறு வள்ளிக்கிழங்கு வேறு அல்லவா?--ரவி 16:10, 3 டிசம்பர் 2006 (UTC)

மன்னிக்கவும் நான் தவறாகத்தான் விழங்கிக்கொண்டிருந்தேன். இனி திருத்திக்கொள்கிறேன். உமா 07:50, 3 டிசம்பர் 2006 (UTC)

ஒன்னும் பிரச்சினையில்லை உமாசுதன். மன்னிப்பு என்பது விக்சனரியர் அகரமுதலியில் தேவை இல்லாத வார்த்தை :)----ரவி 09:41, 6 டிசம்பர் 2006 (UTC)

திரும்பவும் விக்கியுடன்[தொகு]

அலுவலக பணிகாரனமாக சில நாட்கள் தொகுக்கவில்லை இன்றுமுதல் அரம்பம். உமா 03:20 மாலை, 10 பங்குனி 2007

வருக[தொகு]

வருக உமாசுதன்! உங்களை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி--ரவி 10:41, 10 மார்ச் 2007 (UTC)

தமிழ்ச் சொற்கள்[தொகு]

உமாசுதன், விபசாரி, அபிவிருத்தி போன்ற சொற்கள் பொது வாழ்வில் இருந்தாலும் தமிழ் என்று உறுதிப்படுத்திக் கொள்ள இயலாதவை. அவற்றை சொற்பொருளாகத் தருவதைத் தவிர்க்கலாமே? இது போல் பிற மொழிச் சொற்களை கலந்து தர பல அகராதிகள் இருக்கும்போது நாம் நல்ல தமிழ் அகராதியை உருவாக்குவதில் கவனம் செலுத்தலாம் தானே? விபசாரி, அபிவிருத்தி போன்ற தனிப்பக்கங்களில் விலைமாது, வளர்ச்சி என்று நல்ல தமிழில் விளக்கம் தரலாம். இந்த நடவடிக்கையில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் தயவுசெய்து தெரிவியுங்கள். கலந்து உரையாடுவோம்.--ரவி 12:18, 13 மார்ச் 2007 (UTC)

scholarship பக்கத்தில் ஏற்கனவே படிப்புதவித் தொகை என்றபொருள் இருக்கிறது. எனவே, அதே பொருள் தரும் தமிழல்லாதிருக்கக்கூடிய விளக்கமான கல்வி உபகாரச் சம்பளம் என்ற விளக்கத்தை நீக்கி உள்ளேன் . இது போல் பல பக்கங்கள் திருத்தப்பட வேண்டி உள்ளதால், இது போன்று செய்யப்படும் ஒவ்வொரு மாற்றத்துக்கும் தனித்தனியாக விளக்கம் தர இயலாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நடைமுறையில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் தயவுசெய்து தெரிவியுங்கள்--ரவி 18:10, 23 மார்ச் 2007 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:உமாசுதன்&oldid=38076" இலிருந்து மீள்விக்கப்பட்டது