பரட்டைக்கீரை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பரட்டைக்கீரை, பெயர்ச்சொல்.
- (பரட்டை+கீரை)
Corchorus capsularis...(தாவரவியல் பெயர்))
- ஓருகீரை வகை (W.)
- பறட்டைக்கீரை (பதார்த்த. 603.)
விளக்கம்
[தொகு]- மருத்துவ குணங்கள்:
இது ஒரு மருத்துவகுணமுள்ள கீரைவகையாகும்...பத்தியத்திற்கு உகந்தது...ஏனையக் கீரைகளைப்போல பெருத்த அளவில் உணவாகப் பயன்படுத்தமாட்டார்கள்...மருந்தாகவே பயன்படுகிறது...இந்தக் கீரையினால் சிலேட்டுமநோய், வாதப்பிணி,கரப்பான் ஆகியவை போகும்...ஆனால் பித்தத்தை உண்டாக்கும்...
- பயன்படுத்தும் முறை
- கசப்புச்சுவையுள்ள இந்த இலையைத் துவட்டலாகச் செய்து சாதத்துடன் கலந்து உண்டால் அசீரணம் போகும்...ஒரு எடை கீரைக்கு பத்து எடை நீர் விட்டு நாலில் ஒன்றாகக் காய்ச்சி , வடிகட்டி, வேளைக்கு 1-2 அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் , மூத்திரப்பையின் வீக்கத்தையும், அதன் அழற்சியையும் போக்குவதுடன், வெள்ளை விழுதலையும் குணப்படுத்தும்...
- இதைக் குழந்தைகளுக்கு சிறிய அளவில் கொடுக்க, வடிற்றிலுள்ள கிருமிகளை அகற்றும்...இதன் கியாழத்தால் அடிக்குடலில் ஏற்பட்ட வயிற்றுவலி, வாயு சம்பந்தமான வயிற்றுப் பொருமல் நீங்கும்...உலர்ந்த கீரையைக் கியாழமிட்டுப் பருக வாயுவினால் உண்டான சீதபேதி, அக்கினி மந்தத்தால் உண்டான அரோசிகம், துர்பலம் போகும்...இந்தக் கீரையை உலர்த்தி, இடித்துச் சூரணம் செய்து வேளைக்கு 3-4 குன்றி எடை சூரணத்துடன் சம எடை மஞ்சள் தூள் சேர்த்து நெய்யில் மத்தித்து நாளும் 2-3 வேளை சாப்பிட்டுவந்தால் சீதபேதி போகும்...இதன் விதைகளைப் பொடி செய்து வேளைக்கு 30-40 குன்றி எடை சலத்தில் போட்டுக் கலக்கிக்கொடுக்கச் சுரத்தைக் குணப்படுத்தும்...மேலும் அடிக்குடலில் சேர்ந்துவிட்ட மலத்தை வெளியாக்கும்...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- wild colewort--a leafy vegetable-- Brassica
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +