பேச்சு:баллон

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
баллон:
வாயு உருளை

வாயு உருளை எனலாமா?--த*உழவன் 17:14, 1 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

வளி உருளி, வளி உருளை என்பன பொருந்தமானதாக இருக்கும். வளி கொள்கலன் என்றும் சொல்லமாம். வாயு தமிழ் அல்ல. சூறாவளி என்பதில் வரும் வளி என்பது காற்று. நூற்றுக்கணக்கான இடங்களில் வளி என்னும் சொல் பயன்பாட்டில் உள்ளது. சித்த மருத்துவதத்திலும் தமிழ் இலக்கியத்திலும் வளி என்னும் சொல் பெருவழக்கு. திருக்குறளில்,
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.
பிற இடங்களிலும் வழங்குகிறது. வளிமம் என்பது காற்றுவடிவில் உள்ள பொருள் (gas). எனவே வளிம உருளி, வளிம உருளை என்றும் சொல்லலாம். --செல்வா 23:36, 1 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

தங்களது விரிவான விளக்கத்தால் தமிழ் அறிந்தேன்.மிக்க நன்றி. சூறாவளி - அருமையான எடுத்துக்காட்டு.மரு.செந்தி! இந்த இரசிய சொல்லுக்கு, வளிம உருளை என்பது பொருந்துமா? --த*உழவன் 02:20, 2 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

    • பெரும்பான்மையான எந்தவொரு வளி கொள்கலன்களையும் இரசியத்தில் பலூன் என்பர், அதுவே சிறிதாகின், ட்சிக் என்ற விகுதி சேரும்( பலூன்ட்சிக்). வளிம உருளை எனலாம், வளி கொள்கலன் என்று சொல்லலாம். இதுவே சரியாகப் பொருந்துவதால் மாற்றிவிடுகின்றேன்.--சி. செந்தி 15:24, 2 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:баллон&oldid=1226155" இலிருந்து மீள்விக்கப்பட்டது