பேச்சு:அல்குல்
தலைப்பைச் சேர்Appearance
இக்கட்டுரையில் vagina, பெண்குறி என்ற சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு எதினும் ஆதாரம் உண்டா? --இராஜ்குமார் 15:22, 4 ஆகஸ்ட் 2010 (UTC)
- பார்க்க: பக்கத்தின் கீழுள்ள சென்னப்பேரகரமுதலி. அதைச் சொடுக்கினாலே அங்கு இட்டுச் செல்லும். பழ.கந்தசாமி 15:28, 4 ஆகஸ்ட் 2010 (UTC)
- பார்த்தேன். நன்றி.--இராஜ்குமார் 15:33, 4 ஆகஸ்ட் 2010 (UTC)
பெண்குறி என்ற பொருள் உண்டா என்பது பற்றிய விவாதங்கள்
[தொகு]- பெண்குறி மற்றும் vagina என்ற இரு சொற்களும் அல்குல் என்ற சொல்லின் நேரடி பொருள் தராது. இதனை விரைவில் நீக்க வேண்டும். எங்காவது மறைமுகமாக பயன்படுத்திருக்க கூடும். ஆனால் இந்த சொல்லை அங்கு வைப்பதினால் பயனர் தவறாக பயன்படுத்தக் கூடும். பிறகு அதையையே மீண்டும் ஆதாரங்களாக இங்கு சமர்பிப்பார்கள். அதனால் உரையாடிய பின் வேண்டும் ஆனால் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது நீக்கிவிடுங்கள். தகவலைச் செய்த பழ.கந்தசாமி அவர்களுக்கு எனது நன்றி. --இராஜ்குமார் 20:38, 4 ஆகஸ்ட் 2010 (UTC)
- பேரகரமுதலி, அகராதி.காம் போன்ற 5 அகரமுதலிகள் இப்பொருள் தருகின்றன. மேலும், இப்பொருளை நாம் பொருள்களில் ஒன்றாகவே, அதற்குரிய விவாதத்துடனேயே தந்துள்ளோம். அதனால், நீக்கவேண்டுமா என எனக்குத் தெரியவில்லை. கூடவே, பாடல்களைப் பார்க்கும்போது இலைமறை காய்மறையாக, இடக்கரடக்கலாக இப்பொருளில் சொல்லப்பட்டிருக்கலாம் என்றும் எண்ணுகிறேன். பழ.கந்தசாமி 21:26, 4 ஆகஸ்ட் 2010 (UTC)