உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அல்லி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இச்சொல்லின் பொருள்கள் முறையாக விளக்கப்படாமல், மொழிபெயர்ப்புகள் என்னும் பகுதியில் ஓர் அட்டவணையில் சில சொற்களுக்கு(இவை அல்லி என்னும் சொல்லின் பொருள்கள் என்று ஊகிக்கலாம்!!) ஆங்கிலத்தில் பொருள் தந்திருக்கும் முறை உகந்ததாக இல்லை. இதனை மாற்றி அமைக்கும் முன் பயனர்களிடம் இருந்து கருத்து வேண்டுகிறேன். விக்சனரியில் தரப்படும் சொற்கள் சீரான வடிவமைப்பில், ஒழுக்கம் சார்ந்து பொருள்கள் தரப்பட்டு, அவற்றுக்கான பல்மொழி பெயர்ப்புகள் முதலியன இருந்தால் நன்றாக இருக்கும். வெவ்வேறு சொற்கள் வெவ்வேறு வடிவமைப்பில் உள்ளன. இந்நிலையைச் சீரமைக்க வேண்டும் எனக் கருதுகின்றேன். --செல்வா 18:07, 17 பெப்ரவரி 2012 (UTC)

மிகப்பல சொற்கள் "பல்பொருள் ஒருமொழி" -தான் எனவே "இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்" என்னும் தொடர் அவ்வளவாகப் பயன்படக்கூடியது இல்லை. இவற்றை நீக்குவதே நல்லது. அல்லி என்பது ஒரு பூ, அது நீர்ச்செடியில் பூப்பது என்னும் கருத்தை நாம் முதலில் சொல்ல வேண்டும் என்று கருதுகின்றேன். அப்படியே பதிவு செய்கிறேன்.--செல்வா 18:11, 17 பெப்ரவரி 2012 (UTC)
  • அல்லி <-> அள்ளி என்பதற்கு மேற்கோள் தேவை எனக் கருதுகின்றேன். அள்ளி என்றால் தமிழில் வெண்ணெய் என்று பொருள் (கழக அகராதி அல்லது தமிழ் இலெக்ஃசிக்கனைப் பார்க்கவும்).

--செல்வா 18:28, 17 பெப்ரவரி 2012 (UTC)

Start a discussion about அல்லி

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:அல்லி&oldid=1072068" இலிருந்து மீள்விக்கப்பட்டது