பேச்சு:ஆதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

'ஆதி', 'அதி' போன்ற சொற்கள் தமிழில் இருந்து சமஸ்கிருதம் சென்ற சொற்கள், நம் தமிழரும் இதை சமஸ்கிருதம் என்றே மயங்குவர். பண்டைய இலக்கிய உதாரணம் : முதல் குறள் "ஆதி பகவன் முதற்றே உலகு"

  • மேற்கண்ட கூற்றுக்குச் சான்றாக எவரேனும் மொழிவல்லுனர்களின் கருத்துக்கள் இருந்தால், அதைத் தெரிவித்தால் மிக நன்று!...என் எண்ணத்தில் ஆதி என்பது ஒரு வடசொல்தான்...आदि...ஆதி...முதல்/தொடக்கம் என்று பொருள்...மிகக் குறைவாக வடமொழிச் சொற்கள் பயன்படுத்தப்பட்ட நூல்தான் திருக்குறள்...அதற்காக வடமொழிச் சொற்களே அந்த நூலில் இல்லை என்பதல்ல பொருள்...எடுத்துக்காட்டாக மேலே கூறப்பட்ட குறளிலுள்ள பகவன் என்பதும் வடசொல்லே...भगवान्..பகவான்..என்பதே வேர்ச்சொல்...ஆதி பகவன் என்னும் வள்ளுவப் பெருந்தகையின் சொல்லாட்சியில் ஒரு சொல் தமிழாகவும் மற்றொரு சொல் வடமொழியாகவும் இருக்க வாய்ப்பில்லை என்பது என் கருத்து...ஆதிகாலம், ஆதிசிவன், ஆதிவிஷ்ணு, ஆதிகிரந்தம், ஆதிதாளம், ஆதிமூலம், ஆதிவியாதி, ஆதிதெய்வம், ஆதிசைவர் போன்ற சொற்கள் எல்லாம் வடமொழியே...வடமொழியும், தென் மொழியும் ஒன்றுக்கொன்று சொற்களை கொடுத்து வாங்கிக்கொண்டு வளர்ந்த மொழிகள்...அதுதான் மொழிகளின் இயல்பான, அறிவுப்பூர்வமான பரிணாம வளர்ச்சியும்கூட!...--Jambolik (பேச்சு) 20:57, 10 பெப்ரவரி 2014 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ஆதி&oldid=1223183" இலிருந்து மீள்விக்கப்பட்டது