உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Jambolik

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
புதிய கலந்துரையாடலுக்கு, இத்தொடுப்பைச் சொடுக்குக
என் பேச்சுப் பரண்
தொகுப்பு

பரணிடல் முறைமை

நிகழ்ந்த உரையாடற் தொகுதி
2011-2012 | 2013-2014 | 2015-2016

வாங்க! நீங்கள் வந்ததிற்காக மகிழ்கிறேன். உங்களின் அரிய நேரத்தினைச் செலவழித்து, உங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு, முதலில் நன்றி கூறுகிறேன்.

கலந்துரையாட, மேலுள்ள கூட்டல் குறியீட்டை அழுத்தி, வரும் சிறுகட்டத்தில், சுருக்கமாக, கலந்துரையாடலுக்குரியத் தலைப்பிடுங்கள்.

பின்பு, அதன் கீழுள்ள பெரிய கட்டத்தில், அத்தலைப்புக்குரியக் கருத்துக்களைக் கூறுங்கள். இப்பக்கத்தின் முந்தையக் கலந்துரையாடற் பதிவுகளை, வலபக்கமுள்ள என் பேச்சுப் பரணில் அறியலாம்.


பேரகராதி சொற்கள்[தொகு]

பேரகராதியில் கயவு, சங்கமம் போன்ற சொற்களுக்கு ஒரே இலக்கணப்பகுப்பில் பல பக்கங்கள் உள்ளன..அவற்றை எந்த முறையில் தமிழ் விக்சனரியில் பதிவேற்றுவது? அதே தனித்தனிப் பக்கங்களாகவா அல்லது ஒன்றிணைத்து ஒரே பக்கமாகவா? அல்லது ஒரே பக்கத்தில் தனித்தனிப் பாகங்களாகவா?(கயம் என்னும் பக்கத்தைப்போல)..கடைசி முறைக்கு ஒரு புதிய வார்ப்புரு தேவைப்படும் என நினைக்கிறேன்...--Jambolik (பேச்சு) 15:52, 8 சனவரி 2015 (UTC)Reply

கயவு, சங்கமம் என்ற பக்கங்களை ஒரே பக்கமாக ஒன்றிணைக்கவும். பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல் என வரின் முதலில் வினைச்சொல்லையும், அடுத்து பெயர்ச்சொல்லையும், அடுத்து உரிச்சொல்லையும் அமைக்கலாமென்று எண்ணுகிறேன். கயம் என்பதில், படங்களை பெயர்ச்சொல் வார்ப்புருவுக்கு அடுத்து அமைத்து, ஒரே ஒரு தமிழ் என்ற தொடக்க வார்ப்புருவை அமைத்துள்ளேன் எளிமையாக புதியவருக்கு புரியும். சமக்கோடுகளை வைத்து பிரிக்கும் விக்கி அமைக்கு மாற்றினால் தொகுப்பது எளிமையாகும். இல்லையெனில், மாற்றத்தை ஏற்படுத்த மேலுள்ள ஒரே ஒரு தொகுவை திறக்க வேண்டும். அது அலைப்பேசி வழியே தொகுப்பதற்கு கடினமாக இருக்கும். மற்றவை உங்கள் கருத்துக் கண்டு.--தகவலுழவன் (பேச்சு) 02:01, 11 சனவரி 2015 (UTC)Reply
 • பேரகராதியில் குகனேரியப்ப முதலியார்/கோனேரியப்ப முதலியார் என்ற சொற்கள் உள்ளன...இவை தமிழ் மொழியின்பாற்பட்டச் சொற்களாகத் தெரியவில்லை...இந்தச் சொற்களுக்கான பொருளோ அல்லது விளக்கமோ ஆங்கே தரப்படவில்லை...ஆங்கில மொழிபெயர்ப்பும் இல்லை...அநேகமாக அக்காலத்தில் புகழ்மிக்க ஒரு நபராகயிருந்திருக்கலாம்... இந்தச்சொற்களை விக்சனரிக்கு கொண்டுவருதலால் ஆகப்போவது ஒன்றுமில்லை...இவைகளைப் பதிவேற்றுவதைத் தவிர்த்து விடலாம் என்பது என் எண்ணம்...தங்கள் கருத்து என்னவோ அதன்படி செய்யலாம்...

--Jambolik (பேச்சு) 19:10, 13 சனவரி 2015 (UTC)Reply

உள்ளது உள்ளபடி பதிவேற்றலாம். ஆய்வு செய்வோருக்கு உதவுக்கூடும். ஒரு சொல்லை, ஒரு படைப்பில் இருந்து, நீக்குதல் என்பது சரியாக எனக்குப் படவில்லை. மற்றபடி உங்கள் எண்ணம் கண்டு.--தகவலுழவன் (பேச்சு) 00:09, 14 சனவரி 2015 (UTC)Reply

பலமொழி மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • கடுகு என்னும் பக்கத்தைப் பார்க்கவும்...அதில் ஆங்கிலம் நீங்கலாக பிற மொழிபெயர்ப்புகள் அமைந்தவிதம் சரிதானா?...பழைய பக்கங்கள் மேம்படுத்தப்படும்போது இம்மாதிரி பிரச்சினைகள் உருவாகலாம்...தற்சமயம் பதிவேற்றும் சொற்களுக்கான படிவத்தில் அநேக மொழிபெயர்ப்புகளுக்கு இடமில்லை...ஏதேனும் தனித்த வார்ப்புரு உள்ளதா?--Jambolik (பேச்சு) 16:29, 15 சனவரி 2015 (UTC)Reply
மாற்றங்களைக் காணவும். பெரும்பான்மையான மாற்றங்களுக்கு அம்மா சொல்லை மாதிரியாகக் கொள்ளவும்.--தகவலுழவன் (பேச்சு) 18:05, 15 சனவரி 2015 (UTC)Reply

பரணிடல்[தொகு]

இந்த வருட உரையாடல்களை வைத்துக் கொண்டு, முந்தைய வருட உரையாடல்களை பரணிடக் கோருகிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 18:06, 15 சனவரி 2015 (UTC)Reply

உங்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டது ஏராளம்...எப்படி பரணிடுவது என்பதையும் சொல்லிக் கொடுங்கள்...--Jambolik (பேச்சு) 17:11, 2 பெப்ரவரி 2015 (UTC)
2011-2012 என்ற பகுதிக்குச் சென்று, உட்பிரிவு21-மூன்றெழுத்துச் சொற்களை பதிவேற்றும் முறை என்ற தலைப்பு வரை உள்ள உரையாடல்களை முதலில் நகலெடுத்து, அதில் சேமியுங்கள். அதே போல, 2013-2014 சென்று, 22முதல்64 வரை உள்ளவற்றை சேமித்து, உங்கள் பயனரை பேச்சு பக்கத்தில் 65 முதல் வைத்துக் கொண்டு, பிறவற்றை நீக்கி, சேமிக்கவும். அவ்வளவு தான் . வணக்கம்.-- உழவன்+உரை.. 00:58, 3 பெப்ரவரி 2015 (UTC)
நகலெடுக்கும் போது, பக்கத்தின் மேலுள்ள தொகு என்பதைத்திறந்து நகலெடுக்கவும். அப்பொழுதுதான் இதே போல விக்கி வடிவம் பரணிலும் இருக்கும்.-- உழவன்+உரை.. 01:40, 3 பெப்ரவரி 2015 (UTC)
பயனர் பேச்சு:தகவலுழவன்/காலக்கோடு இதுபோல நீங்களும் உருவாக்கி , உங்கள் பேச்சுப்பக்கத்தின் தொடக்கத்தில் இட்டால் எனது பேச்சுபக்கத்தின் இடப்புறம் வருவது போல அமையும். -- உழவன்+உரை.. 02:11, 4 பெப்ரவரி 2015 (UTC)
தகவலுக்கு மிக்க நன்றி, தகவலுழவன் ஐயா--Jambolik (பேச்சு) 04:38, 4 பெப்ரவரி 2015 (UTC)
பயனர்:Jambolik/பயனர் பேச்சு:Jambolik-2011-2012‎ சீராக பரணிட்டுள்ளேன்.-- உழவன்+உரை.. 03:04, 5 பெப்ரவரி 2015 (UTC)
உங்களின் பேச்சுப்பக்கக் கட்டகம் அமைக்கப்பட்டது-- உழவன்+உரை.. 03:30, 5 பெப்ரவரி 2015 (UTC)
 • உங்களுக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்றே எனக்குத்தெரியவில்லை!...வெகு சிறப்பாக பழைய பேச்சுக்களை பரணிட்டு, பேச்சுப்பக்க கட்டகத்தையும் உருவாக்கிவிட்டீர்கள்...உங்கள் உதவிக்கும், ஒத்துழைப்புக்கும் மிக, மிக நன்றி...--Jambolik (பேச்சு) 14:05, 5 பெப்ரவரி 2015 (UTC)
உங்களின் வாழ்த்துக்கு நன்றி. உண்மையில் நீங்கள் இங்கு படைக்கிறீர்கள். நானோ பெரும்பாலும் நகலிடுகிறேன். உங்கள் உரை கண்டு, என்னுள் இருந்த அயர்ச்சி சற்று நீக்கியது. மீண்டும் மற்றுமொரு முன்னேற்றப் பணியில் சந்திப்போம். வணக்கம்.-- உழவன்+உரை.. 16
 • 32, 5 பெப்ரவரி 2015 (UTC)

ஆங்கிலச் சொற்கள் பதிவேற்றம்[தொகு]

 • ஆங்கிலக் கூட்டுச்சொற்களுக்கு ஒலிப்புகள் மற்றும் சொற்பிறப்பியல் உருவாக்கப்படுவதில்லை/பொருந்தாது என்றொரு நியமம் இருப்பதாக நினைவிருக்கிறது...அது இன்றளவும் தொடர்கிறதா?...ஆங்கிலச் சொற்களுக்கு பயன்பாடு எப்படித் தருவது?...தமிழ் வழியிலா அல்லது ஆங்கிலமொழியிலா?--Jambolik (பேச்சு) 17:36, 17 பெப்ரவரி 2015 (UTC)
ஆம். கூட்டுச் சொற்களுக்கு இன்றளவு ஒலிக்கோப்புகள் உருவாக்கப்படவில்லை. ஒலிக்கோப்புகள் இல்லா தனிச் சொற்களிலும் கூட, அதற்குரிய வார்ப்புருக்கள் ஆங்கில விக்சனரியில் நீக்கப்படுகின்றன. சொற்பிறப்பியல் வார்ப்புருவில் உள்ள இணையமானது, தனிச்சொல்லினையே ஆராய்கிறது. கூட்டுச்சொற்களில் ஆய்வதில்லை. எனவே தான் அவ்வார்ப்புருக்கள் இணைப்பதில்லை. நீக்குகிறோம். தலைப்புச்சொல் ஆங்கிலம் என்றால், பயன்பாடும் ஆங்கிலம் தானே தர வேண்டும். தலைப்புச்சொல்லே, ஒரு மொழியின் பயன்பாட்டை முடிவு செய்கிறது அல்லவா? -- உழவன்+உரை.. 01:59, 18 பெப்ரவரி 2015 (UTC)

உள் இணைப்புகள்[தொகு]

^ஒரு பக்கம் உருவாக்கப்படும்போது தரப்படும் உள்ளக இணைப்புகள் ( தாவளி‎)--போன்றவை, குறைந்தபட்சம் எத்தனைச் சொற்களுக்குத் தரவேண்டும்?--Jambolik (பேச்சு) 22:12, 9 மார்ச் 2015 (UTC)

முக்கியமான ஓரிரு சொற்களுக்குத் தந்தால், அப்பக்கம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என இரவி முன்பு ஏதோ ஒரு உரையாடற்பக்கத்தில் தெரிவித்ததாக ஞாபகம்.-- உழவன்+உரை.. 01:17, 10 மார்ச் 2015 (UTC)

BasicEnglish[தொகு]

இங்குள்ள உருவாக்கப்படாத சிவப்புச் சொற்களை சிறப்பாக உருவாக்கக் கோருகிறேன்.-- உழவன்+உரை.. 05:31, 8 ஏப்ரல் 2015 (UTC)

 • எனக்குத் தெரிந்தவரை அந்த நான்கு சொற்களையும் உருவாக்கிவிட்டேன்...சிறப்பாக இருக்கிறதா என்றுத் தெரியாது...தமிழ், ஆங்கிலம் இருமொழிகளும் நன்கு அறிந்தோரைக்கொண்டு ஒருமுறை சரிப்பார்த்துக்கொண்டால் நல்லது..நன்றி...வணக்கம்--Jambolik (பேச்சு) 22:46, 8 ஏப்ரல் 2015 (UTC)

ஆங்கிலத்தில் தமிழ், இந்திய மொழிச் சொற்களுக்கானப் பகுப்புகள்.[தொகு]

 • தற்சமயம் ஆங்கிலம்- இந்தியமொழிச் சொற்கள், ஆங்கிலம்-ஆங்கிலத்தில் தமிழ்ச்சொற்கள் ஆகிய இரு பகுப்புகள் உள்ளன...தமிழ்ச் சொற்கள் இந்தியமொழிச் சொற்கள் என்னும் பகுப்பில் காட்டப்படுவதில்லை...தமிழ்ச் சொற்களுக்குத் தனிப்பகுப்பை நிருவகிக்கும் அதே சமயத்தில், அச்சொற்களை இந்தியமொழிச் சொற்கள் என்ற பகுப்பிலும் காட்டினால் சிறப்பாகயிருக்கும்...உங்கள் எண்ணத்தை அறிய ஆவல்--Jambolik (பேச்சு) 16:34, 18 ஏப்ரல் 2015 (UTC)

Translating the interface in your language, we need your help[தொகு]

Hello Jambolik, thanks for working on this wiki in your language. We updated the list of priority translations and I write you to let you know. The language used by this wiki (or by you in your preferences) needs about 100 translations or less in the priority list. You're almost done!
எல்லா விக்கிகளுக்கும் மொழிபெயர்ப்புகளைச் சேர்க்க அல்லது மாற்ற, மீடியாவிக்கி உள்ளூராக்கல் திட்டமான translatewiki.net ஐப் பயன்படுத்துக.

Please register on translatewiki.net if you didn't yet and then help complete priority translations (make sure to select your language in the language selector). With a couple hours' work or less, you can make sure that nearly all visitors see the wiki interface fully translated. Nemo 14:06, 26 ஏப்ரல் 2015 (UTC)

Names of Wikimedia languages[தொகு]

Dear Jambolik,

we are initiating a long needed action - we would like to translate names of all Wikimedia languages to all Wikimedia languages in the next two months. We have noticed that you are very active on Wiktionary and that is the reason why we are taking liberty to contact you.

We hope that you would be interesting to help us in our endeavor - To make this action easier we have already prepared the list of all Wikimedia languages, and for each language we have already prepared the page with existing and missing translations. So when you go to the page for your language you would have two tasks - to check whether existing translations are OK and to fill in the missing one. The more detailed instruction are on the language page.

What are the benefits of this work?

 • We believe it is about time to have all Wikimedia languages translated to all Wikimedia languages :)
 • Translated languages will be parsed into Wiktionary and the resulting number of Wiktionary entries will be significant for each language. That could significantly increase the number of entries for less developed Wiktionaries, and improve the quality of entries in general.
 • Wikidata - this would be great contribution to Wikidata.
 • All other projects could benefit from this list (Wiki Travel :)), as we believe that certain amount of terms has to be properly translated to all languages.

We are gathered around the project Wiktionary Meets Matica Srpska and we hope that you would be interesting in working with us! If you have any questions you can ask them on the Names of Wikimedia languages discussion page or via personal emails.

Important notice: The data are licensed under CC0, as they should be incorporated into Wikidata at the end of the process.

If you don’t want to receive future announcement about the project, please leave a note on discussion page.

Thank you and looking forward to hear from you!

Interglider.org team

Senka Latinović (பேச்சு) 14:06, 28 ஏப்ரல் 2015 (UTC)

விளக்கம் தேவை[தொகு]

 • பேரகராதியில் சூர்&sup4;-தல் போன்ற சொற்கள் பல உள்ளன...இத்தகையச் சொற்களைப் பதிவேற்றுவதில் சிறிது குழப்பம் ஏற்படுகிறது... இந்த &sup4 என்னும் குறிப்பு எதை உணர்த்துகிறது என்று விளக்குவீர்களா?--Jambolik (பேச்சு) 16:04, 30 ஏப்ரல் 2015 (UTC)
  • ஒன்றிற்கும் மேற்பட்ட பொருளை இது குறிக்கிறது. சூர்1, சூர்2, சூர்3, சூர்4 எனவே, &sup4; என்பது குறியீடு மாற்றத்தின் போது ஏற்பட்ட களை
 • இந்த தலைப்பிலுள்ள விடயத்திலும், ஆங்கிலத்தில் தமிழ், இந்திய மொழிச் சொற்களுக்கானப் பகுப்புகள் என்னும் தலைப்பிலுள்ள விடயத்திலும் பதிலைக் கோருகிறேன்--Jambolik (பேச்சு) 19:25, 4 மே 2015 (UTC)Reply
  • ஒரு சொல் எம்மொழிக்குரியது என்பதை நான் கற்றறியவில்லை. தமிழுக்குரிய விக்கி நுட்பங்களையே, இங்கு கற்கிறேன். விக்கிப்பீடியாவில் மொழிக்குரிய கட்டுரைகள் பல உள்ளன. அதனை உருவாக்கியவர்களிடம் உரையாடினால், இதற்கான வழிபிறக்கும்.---- உழவன்+உரை.. 03:00, 5 மே 2015 (UTC)Reply

நன்றி, வணக்கம்[தொகு]

 • இனி, வரும் நவம்பர் 2015 வரை என்னிடமிருந்து பங்களிப்புகள் ஒன்றுமிராது...இதுவரை தமிழ் விக்சனரியில் பலவற்றை எனக்குக் கற்பித்த திரு. தகவலுழவனுக்கு மிக்க நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்...Bye...--Jambolik (பேச்சு) 18:16, 5 மே 2015 (UTC)Reply

w:விக்கிப்பீடியா:உதவித்தொகை என்பதில் கலந்து கொள்க[தொகு]

இந்திய விக்கிமீடியாவின் நிதி உதவியால், மடிக்கணினிப் பெற, தமிழ்விக்கிசமூகத்தின் ஒப்புதல் பெற வேண்டும். எனவே, w:விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer (தகவலுழவன்) என்ற திட்டப்பக்கத்தில், விண்ணப்பித்துள்ளேன். இதுபற்றி ஏற்கனவே, தமிழ் விக்கிப்பீடியாவின் மேனிலைப் பங்களிப்பாளர்(Bureaucrats)களுக்கும், சிறப்புநிலைப் பங்களிப்பாளர்(system operator) களுக்கும், அவரவர் உரையாடற்பக்கத்தில், தனித்தனியே செய்தி விடுத்துள்ளேன். பிற பங்களிப்பாளரகளும், அத்திட்டபக்கத்தில் தங்களின் நிலைப்பாட்டைக் கூற அழைக்கிறேன். மேலும், பிற தமிழ் திட்டங்களின் ஆலமரத்தடியிலும், இச்செய்தி விடுத்துள்ளேன். வணக்கம்.---- உழவன்+உரை.. 01:41, 11 சூலை 2015 (UTC) Reply

வாக்கிடுக[தொகு]

https://ta.wikipedia.org/s/54k8 என்ற திட்டபக்கத்தில் வாக்கிடக் கோருகிறேன். வணக்கம்--தகவலுழவன் (பேச்சு) 13:44, 30 நவம்பர் 2015 (UTC)Reply

நன்றி ஏன் ?[தொகு]

 • நான் பதிவேற்றும் தெலுங்குச் சொற்களுக்கு திரு.தகவலுழவன் அவர்களால் அடிக்கடி நன்றி தெரிவிக்கப்படுகிறது...இதற்கு ஓர் அவசியமும் இல்லையென்றே நினைக்கிறேன்...ஏதாவது மாறுதல்/மேம்படுத்தல் தேவையென்றால் மட்டுமே தெரிவிக்கலாமே!--Jambolik (பேச்சு) 16:40, 3 திசம்பர் 2015 (UTC)Reply
அது மகிழ்ச்சியுரை. பட நேர்த்தி; புடவுரை நேர்த்தி: விளக்கவுரை நேர்த்தி.. நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். இத்தகைய சிறப்புகளுடன், இதுவரை யாரும் இல்லை. வாழ்த்த எனக்கு வயதோ, அனுபவமோ இல்லை. இனி நன்றியுரை என்பதை மகிழ்ச்சியுரை என, எடுத்துக் கொள்ளுங்கள். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 17:19, 3 திசம்பர் 2015 (UTC)Reply

விக்கிமூலம் வருக![தொகு]

https://ta.wikisource.org/s/4l8 என்ற திட்டப்பக்கத்திற்கு வருக. பிறரைப்போல, உங்களின் கருத்தினையும், அங்கு வெளிப்படுத்துமாறு கோருகிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 01:42, 17 சனவரி 2016 (UTC)Reply

விளக்கம்[தொகு]

ஐயா, தாங்கள் அற்புதமாக வார்த்தைகளுக்கு மேம்பாடு செய்து வருகிறீர்கள். விளக்கம் பகுதியில் நன்றாக நீண்ட விளக்கங்கள் அளித்து வருகிறீர்கள். மகிழ்ச்சி. ஆனால் ஏன் <small> பயன்படுத்துகிறீர்கள். சொற்கள் மிகவும் சிறிதாக தெரிகிறது. பலரால் சிறு எழுத்துக்களை சுலபமாக படிக்க இயலாது. பொதுவான font size விளக்கத்திற்கும் இருந்தால் நன்று என்று கருதுகிறேன். நன்றி. - பாலாஜி (பேசலாம் வாங்க!) 02:42, 20 பெப்ரவரி 2016 (UTC)

 • தங்கள் பராட்டுதல்களுக்கு மிக்க நன்றி...நான் கணிணியின் நுணுக்கங்களை நன்கறியேன்..சின்ன எழுத்துக்களைப் பயன்படுத்தினால் பார்க்க அழகாகவும், அடக்கமாகவுமிருக்கிறது...அவ்வளவுதான்...வேறெந்த வார்ப்புருவைப் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறீர்கள்?--Jambolik (பேச்சு) 03:29, 20 பெப்ரவரி 2016 (UTC)
 • வேற வார்புருகள் ஏதும் தற்பொழுது தோன்றவில்லை ஐயா. எழுத்துக்கள் மட்டும் சிறிதாக இல்லாமல் இருந்தால் படிக்க எளிமையாக இருக்கும். பலர் விக்சனரியை தற்பொழுது கைபேசியில் பார்க்கின்றனர். அவர்களுக்கு இச்சொற்கள் மேலும் சிறிதாக தோன்றும். அதனால் படிக்காமல் விட்டுவிடுவர். தங்கள் உழைப்பு வீணாகிவிடும். அதனால் தெரிவித்தேன். small பயன்படுத்தாமல் அப்படியே பதிவேற்றம் செய்தால் கூட நன்றாகவே இருக்கும் என கருதுகிறேன். நன்றி. - பாலாஜி (பேசலாம் வாங்க!) 03:36, 20 பெப்ரவரி 2016 (UTC)

துப்புரவு திட்டம் அழைப்பு[தொகு]

வணக்கம், Jambolik.

விக்சனரியை செம்மையாக்குவதை நோக்காக கொண்ட துப்புரவு திட்டத்தில் பங்கெடுக்க தங்களையும் அழைக்கின்றோம். குழு உறுப்பினர்கள் பகுதியில் தங்கள் பெயரை இணைத்து தங்கள் சிறந்த பங்களிப்பை நல்க வாழ்த்துக்கள். மேலதிக விபரங்களிற்கு திட்டப் பக்கம் வருக.

-- மாதவன்  ( பேச்சு ) 10:01, 26 மார்ச் 2016 (UTC)

 • அழைப்பிற்கு நன்றி...இந்தத் திட்டத்தில் என்னால் பங்கேற்க இயலாமைக்கு வருந்துகிறேன்..--Jambolik (பேச்சு) 17:47, 27 மார்ச் 2016 (UTC)

விக்கியின் பயிற்சிக் கூடல்[தொகு]

மதிப்பிற்குரிய நண்பரே! நலமாக இருப்பீர்களென்று எண்ணுகிறேன். சென்னையில் தமிழ் விக்கியருக்கான பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. அதில் நீங்கள் கலந்து கொண்டால், உங்களைப் பற்றியும், விக்சனரியின் தேவைகளையும், அமெரிக்காவில் இருந்து வரும் விக்கிமீடிய ஊழியர்களிடமும், பிறரிடமும் ஆலோசிக்கலாம். நீங்கள் வந்து செல்ல, சென்னையில் தங்குவதற்கான மூன்று நாட்கள் செலவை, விக்கியே ஏற்கும். கலந்து கொள்ள வேண்டுகிறேன். உங்களின் சூழ்நிலை என்ன? இது குறித்த மேலதிக விவரங்களைஇப்பக்கத்தில் அறிந்து கொள்ளலாம். ஆவலுடன்..--தகவலுழவன் (பேச்சு) 01:17, 2 ஏப்ரல் 2016 (UTC)

 • வணக்கம் தகவலுழவன்..நான் நலமே!..நீங்கள் நலமாகவேயிருப்பீர்கள்..நான் தற்சமயம் இந்தியாவில் இல்லை..ஆகவே விக்கியின் பயிற்சிக் கூடலில் கலந்துக்கொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன்...--Jambolik (பேச்சு) 01:44, 2 ஏப்ரல் 2016 (UTC)

வேண்டுகோள்[தொகு]

பொருள் தெரிவியுங்கள்[தொகு]

பக்கங்களில் முறிந்த இணைப்புகள் ஏற்கனவே பல நீக்கப்படாமல் உள்ளது. எனவே, நீக்கம்.) என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது....இதன் பொருள் என்ன?.....எந்த விடயம் நீக்கப்பட்டிருக்கிறது?--Jambolik (பேச்சு) 14:06, 13 சூன் 2016 (UTC)Reply

 • ஒரு சொல்லுக்கான ஒலிக்கோபு்பு இல்லையெனில், அதனை இணைக்க வேண்டாம். காண்க:பகுப்பு:அறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள் இவை அனைத்தும்நீக்கப்பட வேண்டியன ஆகும். இது அனைத்து விக்கிகளிலும் பின்பற்றப்படும் விதியாகும்--தகவலுழவன் (பேச்சு) 16:05, 13 சூன் 2016 (UTC)Reply
 • தமிழ் உட்பட எந்த மொழியாகயிருந்தாலும், ஒரு சொல்லைப் பதிவேற்றும்போது, ஒலிக்கோப்பு இல்லையென்றுத் தெரிந்தால் அந்தச்சொல்லைப் பதிவேற்றவேண்டாமென்றுச் சொல்கிறீர்களா? ஒலிக்கோப்புகள் பின்னொரு நாளில் உருவாக்கப்படு மென்றல்லவா நினைத்தேன்!...அல்லது ஆங்கிலச் சொற்களுக்குமட்டும் சொல்கிறீர்களா?--Jambolik (பேச்சு) 16:27, 13 சூன் 2016 (UTC)Reply
இரு மொழிக்கும் தான், விரைவில் தமிழ் ஒலிக்கோப்புகள் அதிக அளவு பதிவேற உள்ளன. எனவே, தமிழ் கோப்புகளை நீக்காமல் விட்டு விடலாமென்று எண்ணுகிறேன். சரிதானே?--தகவலுழவன் (பேச்சு) 16:35, 13 சூன் 2016 (UTC)Reply
 • அப்படியென்றால் என்னால் பதிவேற்றப்பட்ட, தமிழ் தவிர, மற்ற மொழிச்சொற்களில்--தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம்--ஒலிக்கோப்பு இல்லையெனில் நீக்கிவிடட்டுமா?--Jambolik (பேச்சு) 17:53, 13 சூன் 2016 (UTC)Reply
 • உங்கள் பணி அரும்பணி. எனவே, நீக்குதலுக்கு நேரத்தை செலவழிக்க வேண்டாம் என்ற வேண்டுகோளை முன் வைக்கிறேன்.இனி வரும் சொற்களில், ஒலிக்கோப்புக் குறிப்புகளைத் தவிருங்கள்-- தகவலுழவன் (பேச்சு) 17:59, 13 சூன் 2016 (UTC)Reply
 • நன்றி, வணக்கம்...மீண்டும் உரையாடலில், தேவைப்படும்போது, சந்திக்கலாம்--Jambolik (பேச்சு) 18:12, 13 சூன் 2016 (UTC)Reply

--Jambolik (பேச்சு) 12:35, 14 சூன் 2016 (UTC)Reply

இதற்கு என்ன அர்த்தம்?[தொகு]

 • நேற்றுதான் Americanism என்னும் சொல்லை மேம்படுத்தினேன்...அந்தப்பக்கத்தில் UT-interwiki-Bot என்பதின் வாயிலாக, de:Americanism, en:Americanism போன்ற பதிவேற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன...பல விக்சனரி பக்கங்களில் இப்படிப்பட்டக் குறிப்புகளைக் கவனித்திருக்கிறேன்...இதன் பொருளென்ன?--Jambolik (பேச்சு) 12:35, 14 சூன் 2016 (UTC)Reply
 • அதனை interwiki link என்பார்கள். இதே Americanism என்ற வார்த்தை வேறு மொழி விக்சனரிக்கு இணைப்பு தருவதற்காக இப்படி செய்யப்படுகிறது. en:Americanism என்பது ஆங்கில விக்சனரி, de:Americanism என்பது டச்சு விக்சனரி. இப்படி. இதனால் ஒரு வார்த்தைக்கு பல மொழிகளில் பொருள் தெரிந்து கொள்ளலாம். முதலில் விக்கிபீடியாவிலும் இப்படி இருந்தது. ஆனால் அதனை [www.wikidata.org]க்கு மாற்றிவிட்டார்கள். எதிர்காலத்தில் விக்சனரிக்கும் இப்படி செய்வார்கள். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 13:12, 14 சூன் 2016 (UTC)Reply
 • தகவலுக்கு நன்றி--Jambolik (பேச்சு) 13:39, 14 சூன் 2016 (UTC)Reply

Share your experience and feedback as a Wikimedian in this global survey[தொகு]

 1. This survey is primarily meant to get feedback on the Wikimedia Foundation's current work, not long-term strategy.
 2. Legal stuff: No purchase necessary. Must be the age of majority to participate. Sponsored by the Wikimedia Foundation located at 149 New Montgomery, San Francisco, CA, USA, 94105. Ends January 31, 2017. Void where prohibited. Click here for contest rules.

என் பெயர் robin தூத்துக்குடி மாவட்டம் எனக்கு நடப்பு தமிழ் வேண்டாம் பழைய தமிழ் சொற்கள் அடங்கிய கு...[தொகு]

robin thoothukudi tamil nadu India

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Jambolik&oldid=1641140" இலிருந்து மீள்விக்கப்பட்டது