உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:உடன்பிறப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சகோரத்துவம் என்றால் brotherhood என்று பொருள். அது சரியல்ல. நீக்கட்டுமா?--செல்வா 02:09, 31 ஜூலை 2010 (UTC)

  • எனக்கும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால், பேரகரமுதலியில் அது பொருளாகக் கொடுக்கப்பட்டுள்ளது, அங்குள்ள் ஆங்கிலப் பொருளுக்குச் சரியான தமிழ்ப் பொருளைத் தந்தபின் நீக்கலாம்.:) பழ.கந்தசாமி 02:14, 31 ஜூலை 2010 (UTC)
-த்வம் என்று முடிந்தால் அது தத்துவம், கொள்கை, கருத்தியம் போன்றவற்றைக் குறிக்கும். உடன்பிறப்பு என்பது உடன்பிறப்புத்தோழமை என்னும் பொருள் கொண்டால் சகோரத்துவம் பொருந்தும். இங்கு உடன்பிறப்பு என்பது உடன்பிறந்தாரைக் குறிக்கும் சொல். பேரகரமுதலியில் பல பிழைகள் உள்ளன. பாவாணர் அதைப்பற்றி (பிழைகள், குறைபாடுகள் பற்றி) ஒரு நூலே எழுதியுள்ளார். --செல்வா 02:21, 31 ஜூலை 2010 (UTC)
  • உடன்பிறந்தமை என்று பொருளிட்டுவிடலாமா? பழ.கந்தசாமி 02:22, 31 ஜூலை 2010 (UTC)
ஆம் அது நல்ல சொல்:உடன்பிறந்தமை (ஆனால் இப்பொருள் அச்சொல்லுக்கு உண்டா? எடுத்துக்காட்டு சொற்றொடர்களைச் சிந்தித்தால், அப்பொருள் இருப்பதுபோலவே தெரியவில்லை).--செல்வா 02:26, 31 ஜூலை 2010 (UTC)

Start a discussion about உடன்பிறப்பு

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:உடன்பிறப்பு&oldid=773790" இலிருந்து மீள்விக்கப்பட்டது