உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:உதரவிதானம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Diaphragm என்பதற்குரிய அர்த்தம் பற்றிய ஆய்வு

[தொகு]

diaphragm என்னும் ஆங்கிலச்சொல்லைப் பார்க்கும்போது அது ஒரு பொதுப்படையான சொல்லாக உள்ளது. ஆங்கில மருத்துவத்தில் diaphragm பல பகுதிகளில் குறிப்பிடப்படுகிறது. இதன் அர்த்தம் இரு வெவ்வேறு பகுதிகளைப் பிரித்தல் ஆகும்.

[Middle English diafragma, from Late Latin diaphragma, midriff, from Greek, partition, from diaphrassein, to barricade : dia-, intensive pref.; see dia- + phrassein, phrag-, to enclose.] [1]
  • (thoracic diaphragm) உதரவிதானம்: வயிற்றுக்கும் மார்புக்கும் இடையே உள்ள குறுக்குச் சவ்வு
  • urogenital diaphragm (சொல்லாக்கம் தேவை)
  • pelvic diaphragm (சொல்லாக்கம் தேவை)

மற்றும் உடலின் ஏனைய சில பகுதிகளிலும் diaphragm எனப்படும் சொல் பயன்படுகிறது; மருத்துவம் தவிர ஏனைய துறைகளிலும் diaphragm உபயோகிக்கப்படுகிறது. [2] எனவே அர்த்த ரீதியாகப் பார்த்தால் இரு வெவ்வேறு பகுதிகளை பிரிக்கும் சவ்வு, மென் தகடு என்பதற்கேற்ப பொருள் தருமாறு உபயோகிக்கலாம் என்பது எனது கருத்து. நான் பாடசாலையில் தமிழில் உயிரியல் கற்ற காலத்தில் இதனை (ஈழத்தில்) பிரிமென்றகடு என்று அழைத்ததாக ஞாபகம்.

--சி. செந்தி 21:49, 24 ஜூலை 2010 (UTC)

உதரவிதானம் போன்ற பொருள் புரியாத, பொருத்தம் அதிகம் இல்லாத சொற்களைவிட எளிய சொற்களை ஆளலாம். இருபகுதிகளை பிரித்துதடுப்பாக உள்ள ஒன்று. பிரிமென்றகடு என்பதில் தகடு என்பது சற்று வேறு பொருள் சுட்டக்கூடும் (மாழை அல்லது உலோகத்தகடு போன்ற சற்று கெட்டியான பொருளைச் சுட்டலாம்). ஆகவே பிரிகம், பிரிதை, பிரிப்பான், பிரிப்பி, பிரிபடலம் போன்ற ஏதேனும் ஒரு சொல்லை ஆளலாம். இயற்பிய, பொறியியல் துறைகளிலும், வெற்றிடம் உருவாக்கும் உருளிகளிலும் இவ்வகையான பிரிப்பிகள் உண்டு. அவையும் டை'யாவி'ரம் என்றுதான் கூறுவர். --செல்வா 22:07, 24 ஜூலை 2010 (UTC)

பிரிபடலம் என்பது அர்த்தத்தை வெளிப்படுத்தும் சொல்லாக விளங்குகிறது (நன்றி!), இங்கு thoracic diaphragm என்னும் போது வயிற்றையும் மார்பையும் பிரிக்கும் பிரிபடலம் என்று கருதலாம், ஆனால் சுருக்கமாக எவ்வாறு அழைப்பதென்பது தெரியவில்லை. மார்புப்பிரிபடலம் என்பது சரியாகலாம்.

--சி. செந்தி 23:04, 24 ஜூலை 2010 (UTC)

  • பிரிபடலம் அருமையானச் சொல். ஆழ்ந்த பொருளையும், எளிமையாகவும், அடிக்கடிப் பயன்படும் சொற்களின் கூட்டுச்சொல்லாகவும் இருப்பதால் இதனை நாம் பிறருக்கும் அறிமுகப்படுத்தலாம். --த*உழவன் 00:16, 25 ஜூலை 2010 (UTC)

thoracic diaphram என்பது மார்புப்பகுதியாகிய மேற்புறத்தையும் அடிப்படுதியாகைய வயிற்றையும் பிரிக்கப்படும் இடத்தில் உள்ள பிரிபடலம் ஆகையால் இதனைக் குறுக்குப்பிரிபடலம் என்லாம். மார்புப்பிரிபடலம் என்பதும் சரியானதாக இருக்கும் என்று நினைக்கின்றேன். குறுக்குப்பிரிப்பி, குறுக்குத்தடுக்கு போன்ற சொற்களையும் எண்ணிப்பார்க்கலாம். --செல்வா 03:04, 25 ஜூலை 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:உதரவிதானம்&oldid=785561" இலிருந்து மீள்விக்கப்பட்டது